ஹெச்.எம்.டி க்ளோபல் நிறுவனம் நோக்கியா 5.1 ப்ளஸ் போனை ஒரு மாதத்துக்குப் முன்னர் அறிமுகப்படுத்தியது.

இந்த போன், ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தில் இயங்குகிறது. 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள் சேமிப்பு வசதியும் 400 ஜிபி வரை சேமிப்பு வசதியை அதிகபடுத்திக் கொள்ளும் ஆப்ஷனும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

மேலும் 5.68 ஹெச்.டி ப்ளஸ் ஸ்க்ரீன், பின்புற டூயல் கேமரா, போன்றவைகள் இந்த போனில் கொடுக்கப்பட்டுள்ளன.

அதி நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் நோக்கியா 5.1 ப்ளஸ் மிகச் சிறப்பாக செயல்படும் ஒரு ஸ்மார்ட் போனாக இருக்கும் என ஹெச்.எம்.டி நிறுவனத்தின் செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. மேலும் மொபைல் கேமிங்கிற்கு ஏற்றாற் போலவும், வீடியோக்கள் பார்ப்பதற்கு சிறந்ததாகவும் இந்த போனை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கிறது.
இந்தியாவில் நோக்கியா 5.1 ப்ளஸ் சந்தை விலை 10,999 ரூபாய் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்டெல் ப்ரீபெய்டு இணைப்பு வைத்திருக்கும் நபர்கள், நோக்கியா 5.1 ப்ளஸ் வாங்கினால் அவர்களுக்கு 1,800 ரூபாய் கேஷ்-பேக் தரப்படும். மேலும் பல டேட்டா பேக்குகளிலும் சலுகைகள் உண்டு.

நோக்கியா 5.1 ப்ளஸ் விற்பனைக்கான ஆர்டர்கள் தற்போதே எடுக்கப்பட்டு வருகின்றன. வருகிற 1 ஆம் தேதி முதல் இந்த போனை வாங்க முடியும்.

நோக்கியா 6.1 போன் போல, நோக்கியா 5.1 ப்ளஸ் ஸ்மார்ட் போனும், ஃப்ளிப்கார்ட் மற்றும் நோக்கியா இணையதளங்களில் மட்டுமே கிடைக்கும்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்