நோக்கியா 5.1 பிளஸ் மற்றும் நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன்களுக்கு ப்ளிப்கார்டில் நோக்கியா டேஸ் விற்பனையில் ரூ.1,000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நோக்கியா 5.1 பிளஸ் மற்றும் நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் வட்டியில்லா மாத தவணை முறை வசதியுடன் வழங்கப்படுகிறது.

மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு 5 சதவிகிதம் கூடுதல் தள்ளுபடி வாங்கிக்கொள்ளலாம். இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி டெபிட் கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது ரூ.1500 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
மேலும் பழைய ஸ்மார்ட்போன்களுக்கு எக்சேஞ்ச் தள்ளுபடியும், ப்ளிப்கார்ட் சார்பில் பைபேக் வேல்யூ சலுகை ரூ.99 விலையில் வழங்கப்படுகிறது.

நோக்கியா டேஸ் விற்பனையில் ரூ.10,999 விலையில் வெளியிடப்பட்ட நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் தற்சமயம் ரூ.9,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன் தற்சமயம் ரூ.14,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.15,999-க்கு சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்