நோக்கியா 5ஜி ஸ்மார்ட்போன் : வெளியீட்டு விபரம்

Nokia introduced its first 5G smartphone - Nokia 8.3 during an online event in March. Though the company revealed its features and pricing, it did not specify the official launch date or its availability.

0
178

ஜியோமியை தொடர்ந்து நோக்கியா மொபைல் நிறுவனமும் ஸ்னாப்டிராகன் 765 பிராசஸர் கொண்ட 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.

நோக்கியா மொபைல் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டு இருக்கும் டீசர் வீடியோவில் நோக்கியா 8.3 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதி பற்றி எந்த தகவலும் இடம்பெறவில்லை. 

நோக்கியா 8.3 5ஜி ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு ஒன் வசதி கொண்டிருக்கிறது. புதிய நோக்கியா ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 ஜி பிராசஸர் வழங்கப்படுகிறது.

இதில் 6.81 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி பேனல், பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, ஃபுல் ஹெச்டி பிளஸ் ரெசல்யூஷன் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஜிபி / 8 ஜிபி ரேம், 64 ஜிபி / 128 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது.

நோக்கியா 8.3 5ஜி சிறப்பம்சங்கள்

– 6.81 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி பேனல், பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, ஃபுல் ஹெச்டி பிளஸ் ரெசல்யூஷன்

– குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 ஜி பிராசஸர்

– 6 ஜிபி / 8 ஜிபி ரேம்

– 64 ஜிபி / 128 ஜிபி மெமரி

– 64 எம்பி பிரைமரி கேமரா, f/1.79

– 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா

– 2 எம்பி மேக்ரோ லென்ஸ்

– 2 எம்பி டெப்த் சென்சார்

– 24 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0

– டூயல் 5ஜி, வைபை, ப்ளூடூத் 5.0

– யுஎஸ்பி டைப்-சி

– 4500 எம்ஏஹெச் பேட்டரி

– 18 வாட் சார்ஜிங்

– ஆண்ட்ராய்டு 10

ஆப்டிமைஸ் செய்யப்பட்ட வடிவமைப்பு கொண்டிருக்கும் புதிய நோக்கியா ஸ்மார்டோபன் அதிக சூடாகாமல் இருக்கும் வகையில் உருவாக்கப்படும். மேலும் 5ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் போதும் நாள் முழுக்க பேட்டரி பேக்கப் வழங்கும் என கூறப்படுகிறது. 

இந்திய மதிப்பில் ரூ. 49,600 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here