நோக்கியா நிறுவனத்திற்கு 102 கோடி வழங்கிய நாசா

Nokia will receive USD 14.1 million to start work on behalf of NASA.

0
158

நிலவில் 4ஜி நெட்வொர்க்கை அமைக்க பிரபல செல்போன் நிறுவனமான நோக்கியாவுடன் நாசா ஒப்பந்தமிட்டுள்ளது.

2028க்குள் நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பி ஆய்வு செய்வதற்கான பணிகளை தீவிரப்படுத்தி உள்ள நாசா, அதற்கான தொழில்நுட்பங்களை உருவாக்க, பல நிறுவனங்களுடன் 370 மில்லியன் அமெரிக்கடாலர்கள் (இந்திய மதிப்பில் 2 ஆயிரத்து 714 கோடி ரூபாய்) மதிப்பிலான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.

அது போல்  நிலவில் 4ஜி/எல்டிஇ நெட்வொர்க்கை அமைக்க பிரபல செல்போன் நிறுவனமான நோக்கியாவுடன் நாசா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

அந்த வகையில், நிலவில் ஆய்வு செய்யும்போது விண்வெளி வீரர்கள் விண்கலத்துடன் தொடர்புகொள்வதற்கும், எச்டி தரத்திலான படங்களை அனுப்பவும், நிலவின் மேற்பரப்பில் 4ஜி நெட்வொர்க்கை அமைக்க நோக்கியாவுக்கு 14.1 மில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் 102 கோடி) நாசா வழங்கியுள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here