பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் அனுபவமில்லாத இந்திய பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசஆஸ்திரேலியா 369 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
2 ஆம்நாள் முடிவில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 26 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்துள்ளது. ஷுப்மன் கில் 7, ரோஹித் சர்மா 44 ரன்களில் ஆட்டமிழந்தார்கள். புஜாரா 8, ரஹானே 2 ரன்களில் களத்தில் உள்ளார்கள்.
ஆட்டம் முடிந்த பிறகு ரோஹித் சர்மா செய்தியாளர்களிடம் பேசியதாவது:
வெள்ளைப் பந்து ஆட்டங்களில் நேர்த்தியாகப் பந்து வீசினார் நடராஜன். அவருக்கு ஐபிஎல் போட்டி நல்லவிதமாக அமைந்தது. ஐபிஎல் போட்டியினால் உண்டான தன்னம்பிக்கையுடன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள், டி20 ஆட்டங்களில் விளையாடினார். இந்த டெஸ்டில் ஆரம்பத்தில் துல்லியமாகப் பந்து வீசினார்.
முதல் டெஸ்டை விளையாடும் நடராஜன், தன்னுடைய பந்துவீச்சு குறித்து நன்கு அறிந்துள்ளார். இதுதான் இந்திய அணிக்குத் தேவையாக உள்ளது. அவரிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறோமோ அதைச் செய்ய முயல்கிறார். அவருக்குப் பிரகாசமான எதிர்காலம் உள்ளது என்றார்.