நேர்கொண்ட பார்வைக்கு யு/ஏ… மேலும் பல செய்திகள்

0
167

நேர்கொண்ட பார்வைக்கு யு/ஏ

அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கியிருக்கும் நேர்கொண்ட பார்வை படத்துக்கு சென்சார் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்தி பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியிருக்கும் இந்தப் படத்தை போனி கபூர் இயக்கியுள்ளார். ஆகஸ்ட் 10 வெளியாவதாக அறிவிக்கப்பட்ட படம் இரண்டு நாள் முன்னதாக ஆகஸ்ட் 8 ஆம் தேதியே திரைக்கு வருகிறது.

கமலுக்கு நன்றி சொன்ன சூர்யா

புதிய கல்விக் கொள்கையை விமர்சித்துப் பேசிய நடிகர் சூர்யாவுக்கு மத்திய, மாநில ஆளுங்கட்சியைச் சோந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு அவதூறாகவும் பேசினர். அதற்கு நடிகரும் மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல் கண்டம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். தனக்கு ஆதரவு அளித்த கமலுக்கு சூர்யா நன்றி தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள செய்தியில், “வணக்கத்திற்குரிய திரு கமல்ஹாசன் அவர்களுக்கு வணக்கம். கல்விக் கொள்கை தொடர்பான என் கருத்துக்கு வந்த எதிர்வினைகளுக்கு எதிராகவும் எனக்கு ஆதரவாகவும் குரல் எழுப்பிய தங்களுக்கும் தங்களின் மக்கள் நீதி மையம் அமைப்பிற்கும் என்னுடைய நன்றிகள். திரையுலகில் என் போன்ற பல கலைஞர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும் தங்களின் ஆதரவு கல்விப் பணியில் தொடர்ந்து தீர்க்கமாக செயலாற்ற ஊக்கமளிக்கிறது. தங்களின் தார்மீக ஆதரவிற்கு மீண்டும் என் நன்றிகள்” என கூறியுள்ளார்.

மலையாளத்தில் மம்முட்டி படத்தில் அறிமுகமாகும் ராஜ்கிரண்

தமிழில் மட்டும் நடித்து வந்த ராஜ்கிரண் முதல்முறையாக மலையாளத்தில் நடிக்கிறார். இவர் மலையாளத்தில் அறிமுகமாகும் படத்தில் மம்முட்டி – மீனா நாயகன் நாயகியாக நடிக்கின்றனர். அஜய் வாசுதேவ் இயக்கும் இந்தப் படத்துக்கு ஸ்கைலாக் என்று பெயர் வைத்துள்ளனர். கோபி சுந்தர் இசை. தமிழை தவிர்த்து ராஜ்கிரண் நடிக்கும் முதல் வேற்றுமொழித் திரைப்படம் இதுவாகும்.

நான் கர்ப்பமாக இருக்கேன்

கன்னட லூசியா திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் ஸ்ருதி ஹரிகரன். தமிழிலும் சில படங்களில் நடித்தார். படப்பிடிப்பில் அர்ஜுன் தவறாக நடந்து கொண்டார் என மீ2 சர்ச்சையை கிளப்பியவர் இவர்தான். நடிகரும், நடனக் கலைஞருமான ராம் குமார் என்பவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்ட ஸ்ருதி ஹரிகரன், நான் கர்ப்பமாக இருக்கேன் என்று புகைப்படம் வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்புக்குப் பிறகே திரையுலகில் உள்ள பலருக்கும் ஸ்ருதிக்கு திருமணம் ஆன விவரம் தெரிய வந்திருக்கிறது.

பிரசன்னாவின் பிரதர்ஸ் டே

தமிழில் வாய்ப்பில்லாத பல திறமைசாலிகளுக்கு மலையாள திரையுலகம் அடைக்கலம் தருகிறது. பெரும்பாலும் நடிகைகளுக்கு. இப்போது நடிகர்களுக்கும் அந்த ஆதரவு தொடர்கிறது. நடிகர் பிரசன்னா தனது முதல் மலையாளப் படமான பிரதர்ஸ் டேயை முடித்துள்ளார். நகைச்சுவை, குணச்சித்திரம், வில்லன் என அனைத்து கதாபாத்திரங்களிலும் கலக்கும் மலையாள நடிகர் கலாபவன் ஷாஜன் இயக்கியிருக்கும் முதல் படம் இது. பிருத்விராஜ், ஐஸ்வர்யா லட்சுமி, மியா ஜார்ஜ் உடன் நடித்துள்ளனர். பிரசன்னாவுக்கு முக்கியமான வேடம். இந்தப் படம் பிரசன்னாவுக்கு மலையாளத்தில் மேலும் பல படங்களை பெற்றுத்தர வாய்ப்புள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here