நேருவின் கொள்கைகளை விமர்சிப்பதில் நேரம் செலவிடும் பாஜக; மன்மோகன் சிங்கின் பொருளாதார கொள்கையை பின்பற்றுங்கள் – மோடி அரசை விளாசும் நிதியமைச்சரின் கணவர்

0
844

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும் , பொருளாதார வல்லுனருமான பரகலா பிரபாகர் பாஜக அரசு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பொருளாதார கொள்கைகளை பின்பற்றவேண்டும் என்றும் நரசிம்ம ராவின் பொருளாதார கொள்கை பாஜகவுக்கு சர்தார் பட்டேலை போன்றது என்றும் தெரிவித்துள்ளார்.  

பரகல பிரபாகர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர்  தி ஹிந்து’ ஆங்கில நாளிதழில்  “பொருளாதாரத்தை வழிநடத்த ஒரு துருவ நட்சத்திரம்” என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். 

திங்கட்கிழமை ஆந்திர பிரதேசத்தின் முன்னாள் தகவல் தொடர்பு ஆலோசகரான பரகல பிரபாகர் (60) நேருவின் பொருளாதார கட்டமைப்பை விமர்சித்ததற்காக ஆளும் கட்சியை விமர்சித்துள்ளார். இந்த விமர்சனம் இன்னும் அரசியல் தாக்குதலாகவே உள்ளது என்பதை கட்சியின் சிந்தனைக்குழு “உணரத் தவறி விட்டது” என்றும் கூறியிருந்தார். 

பாஜகவின் அரசியல் திட்டத்தில் சர்தார் வல்லபாய் படேல் சின்னமாக மாறியது போல, நரசிம்மராவின் பொருளாதார கொள்கை பாஜகவின் பொருளாதார கட்டமைப்பிற்கு ஒரு வலுவான அடித்தளமாக மாறக்கூடும் என்று பரகல பிரபாகர் அக்கட்டுரையில் கூறியுள்ளார். 

நரசிம்ம ராவ்- மன்மோகன் சிங் இவர்களின் பொருளதார கட்டமைப்பு பாஜகவுக்கு உதவக்கூடும். பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கத்திற்கும் பொருளாதாரத்தை தற்போதுள்ள நிலையிலிருந்து மாற்ற உடனடியாக இதை பின்பற்ற வேண்டும். பொருளாதார சிந்தனையில் உள்ள பலவீனத்தை நீக்குங்கள். இல்லையெனில் தொலைக்காட்சி மற்றும் வாட்ஸ் அப்களில் கூச்சலிடும் ஆய்வாளர்களின் சிந்தனைதான் பாஜகவுக்கு தொடர்ந்து கிடைக்கும்  என்றும் அக்கட்டுரையில் கூறியுள்ளார் பரகல பிரபாகர் . 

பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் பாஜக அரசால்  எந்தவொரு பொருளாதார கட்டமைப்பையும் முன்மொழிய முடியவில்லை. ஆனால் அதற்கு பதிலாக நேருவின் கொள்கைகளை விமர்சிப்பதில் நேரம் செலவிட்டு வருகின்றனர் பாஜகவினர் என்று கடுமையாக விமர்சித்துள்ளார் பரகல பிரபாகர்   

அரசாங்கம் பொருளாதாரத்திற்கு என்ன பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதற்கான அறிகுறிகளை ஏற்றூக்கொள்ளவில்லை. சவால்களை புரிந்துகொள்ளும் தொலைநோக்கு பார்வை பாஜக அரசுக்கு இருப்பதற்கான அறிகுறிகளே இல்லை என்று தெரிவித்துள்ளார். 

நாட்டின் பொருளாதாரம் குறித்த கருத்துக்களை ஏற்றுக் கொள்ள பாஜகவிற்கு விவரிக்க முடியாத தயக்கம் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார் பொருளாதார வல்லுனரான பரகல பிரபாகர் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here