விக்ரம், சூர்யா நடித்துள்ள படங்கள் ஒரேநாளில் மோதவிருக்கின்றன.

முன்னணி நடிகர்களின் படங்கள் ஒரேநாளில் வெளியாவது முன்பு சர்வசாதாரணம். ஒரு படத்தை அதிக திரையரங்குகளில் வெளியிடும் வழக்கம் வந்தபிறகு இரண்டு முன்னணி நடிகர்களின் படங்கள் ஒரேநாளில் வெளியாவது அதிசமாகப் பார்க்கப்படுகிறது. 

மே 31 ஆம் தேதி விக்ரம் நடிப்பில் ராஜேஷ் எம்.செல்வா இயக்கியு[ள்ள கடாரம் கொண்டான் திரைப்படம் வெளியாகிறது. ஆக்ஷன் படமான இதில் கமலின் இளைய மகள் அக்ஷராவும், நாசரின் மகனும் ஜோடியாக நடித்துள்ளனர். கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் படத்தை தயாரித்துள்ளது. ஜிப்ரான் இசை.

அதே மே 31 ஆம் தேதி செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள என்ஜிகே படமும் வெளியாகிறது. ரசிகர்கள் பல மாதங்களாக காத்திருக்கும் படம் இது. ஒரேநாளில் இரு முன்னணி நாயகர்களின் படங்கள் மோதுவதால் மே 31 தமிழ் சினிமாவின் முக்கிய தினமாக பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here