இந்திய நீதித்துறையில் வழக்கறிஞராக இருந்து நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்கு இந்து மல்கோத்ரா என்ற பெண் வழக்கறிஞர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் சல்மேஸ்வர், ரஞச்ன் கோகாய், மதன் பி லோகூர் மற்றும் குரியன் ஜோசப் ஆகியோர் அடங்கிய கொலிஜியம், இரண்டு பேரை உச்சநீதிமன்ற பதவிக்குப் பரிந்துரைத்துள்ளது. இதில் உத்தரகாண்ட் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.எம்.ஜேசப் மற்றும் உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக பணியாற்றி வரும் இந்து மல்கோத்ரா ஆகியோர் ஆவர்.

supremecourt

இதுவரை ஆறு பெண் நீதிபதிகள் மட்டுமே உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இருந்துள்ளனர். தற்போது உச்சநீதிமன்றத்தில் பானுமதி மட்டுமே நீதிபதியாக உள்ளார். இதற்கு முன்னர் நீதிபதி, பாத்திமா பீவி, சுஜாதா மனோகர், ரூமா பால், கியான் சுதா மிஸ்ரா, ரஞ்சானா தேசாய் ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவி வகித்துள்ளனர்.

நன்றி : livelaw

இதையும் படியுங்கள்: ஒக்கி பேரிடர்: கரம் கோர்ப்போம்; கட்டியணைப்போம்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்