நேபாளத்தில் பேருந்து ஒன்று 985 அடி ஆழத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 33 பேர் உயிரிழந்தனர். 35 பேர் படுகாயமடைந்தனர்.

நேபாளம் காவ்ரே மாவட்டம் பிர்டாதியுரலி என்னும் பகுதியில், 85 பயணிகளுடன் சென்ற பேருந்து, சாலையில் வளைவில் கட்டுப்பாட்டை இழந்து 985 அடி ஆழத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 33 பேர் உயிரிழந்தனர். மேலும் 35 பேர் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு காத்மாண்டில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். காயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்