நெல்லை மாவட்டம் ஏர்வாடியிலுள்ள பள்ளியொன்றில் நடைபெற்ற விழாவின்போது, பயன்படுத்தப்பட்ட சக்தி வாய்ந்த விளக்கு வெளிச்சத்தால் மாணவர்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோருக்கு கண் பார்வை பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து பள்ளி நிர்வாகி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் ஏர்வாடியிலுள்ள எஸ்வி இந்து பள்ளியில், ஆண்டுவிழா நடைபெற்றது. இந்த விழாவிற்காக சக்தி வாய்ந்த வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன. இதிலிருந்து வெளிவந்த அதிக ஒளியின் காரணமாக அங்கிருந்தவர்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டது. மேலும் சிலருக்கு கண்ணில் வீக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர்கள் அனைவரும் சனிக்கிழமை (இன்று) காலை, நெல்லையிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, பள்ளி நிர்வாகி பாலசுப்ரமணியனை போலீசார் கைது செய்தனர். மேலும், எலக்ட்ரிசியனான ரமேஷ் என்பவர் மீதும் ஐந்து பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதையும் படியுங்கள்: சிரியா: பட்டினியால் உண்டான போர் இது

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்