நெல்லை கண்ணனுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் ப. சிதம்பரம்

0
503


பிரதமர் மோடி  குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நெல்லை கண்ணனுக்கு ஆதரவாக முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் குரல் கொடுத்துள்ளார்.

இது குறித்து ப சிதம்பரம்  தனது டிவிட்டர் பக்கத்தில் பேசினாலே குற்றம் என்று புதுமையான சட்ட நெறிகள் புகுத்தப்படுகின்றன. பேசுவதே குற்றம் என்று வைத்துக்கொண்டாலும், அதற்கு ஏன் 14 நாள் விசாரணைக் கைதியாக சிறையில் அடைக்க வேண்டும்?

மற்றுமொரு டிவீட்டில் பேச்சும் செயலும் இணைந்தால் தான் குற்றம். நெல்லை கண்ணன் பேசினார் என்று வைத்துக்கொள்வோம், என்ன தீய செயலை அவர் செய்தார்?

இப்படி நினைப்பவர்களை லண்டன் மாநகர் ஹைட் பார்க் (Hyde Park) என்ற பூங்காவிற்கு அனுப்ப வேண்டும். அங்கே பேசப்படுவதை அவர்கள் கேட்க வேண்டும்  என்று பதிவிட்டுள்ளார்.

திருநெல்வேலி மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் குடியுரிமைப் பாதுகாப்பு மாநாடு, கடந்த மாதம் 29-ஆம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதமர்,  குறித்து அவதூறாகப் பேசியதாக, நெல்லை கண்ணன் மீது திருநெல்வேலி மாநகர காவல் ஆணையரிடம் பாஜகவினர் புகார் அளித்தனர். அதைத் தொடர்ந்து, இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் நெல்லை கண்ணன் மீது மேலப்பாளையம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்தப் புகாரின்பேரில், பெரம்பலூரில் தனியார் விடுதியில் தங்கியிருந்த நெல்லை கண்ணனை, போலீஸார் கடந்த 1 ஆம் தேதி கைது செய்தனர். பின்னர் வியாழக்கிழமை திருநெல்வேலி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, இம் மாதம் 13 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. 

Nellai Kannan Video About BJP PART-2

பாஜகவை கதறவிடும் நெல்லை கண்ணனின் பேச்சு – பகுதி 2 😂😂😂😂👌👌👌#MustWatch

Tamizhan Memes यांनी वर पोस्ट केले सोमवार, ३० डिसेंबर, २०१९
Nellai Kannan Video About BJP PART-1

எச்.ராஜா & பாஜக வினரை கதற விட்ட 😍நெல்லை கண்ணனின் முழுப் பேச்சு..!!

Tamizhan Memez यांनी वर पोस्ट केले मंगळवार, ३१ डिसेंबर, २०१९

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here