உச்சநீதிமன்ற உத்தரவுப் படி வரும் செவ்வாய்கிழமைக்குள் எரிக்சன் நிறுவனத்திற்கு 453 கோடி ரூபாய் வழங்காவிட்டால், சிறைக்கு செல்ல வேண்டிய இக்கட்டான நிலைக்கு அனில் அம்பானி தள்ளப்பட்டுள்ளார்.

2008 ஆம் ஆண்டு உலக செல்வந்தர்கள் பட்டியலில் 6வது இடத்தில் இருந்த அனில் அம்பானி, தற்போது கடன் சுமையில் சிக்கி தனது நற்பெயரை காப்பாற்ற வேண்டிய  நெருக்கடியான கட்டத்தில் உள்ளார். ஸ்வீடனை சேர்ந்த எரிக்சன் நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டிய 453 கோடியை திரட்டுவதற்காக, அனில் அம்பானி பல்வேறு விதத்திலும் முயன்று வருகிறார்.

இந்த நிலையில் வரியாக செலுத்திய 260 கோடி ரூபாயை திரும்ப வழங்க எஸ்பிஐ உள்ளிட்ட  நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும் என்ற அவரது கோரிக்கையை தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம்   நிராகரித்து விட்டது. இந்த விவகாரம்  திவால் நடவடிக்கைக்கு செல்லாமல் பிரச்சனைக்கு தீர்வு காணுமாறு தீர்ப்பாயம் அறிவுறுத்தி இருக்கிறது.

திவால் நடவடிக்கையின் படி அனில் அம்பானி நிறுவன சொத்துக்கள் விற்கப்பட்டால் அதில் வரும் தொகையைப் பெறும் முதல் உரிமை எஸ்பிஐ வங்கிக்கே உள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here