நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட்டதா ஜெம் நிறுவனம்?

0
736

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் செயல்படுத்த இருந்த ஹைட்ரோகார்பன் திட்டத்தை தனியார் நிறுவனம் கைவிட்டுள்ளதாக பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன

அனுமதி வழங்குவதில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட்டதாக ஜெம் நிறுவனம் தெரிவித்துள்ளதாக கருதப்படுகிறது. தொடர் போராட்டம் காரணமாக ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு அனுமதி வழங்குவதில் காலத்தாமதம் ஏற்ப்பட்டது.

தகவல் அறிந்த நெடுவாசல் கிராம மக்கள் தங்களது தொடர் போராட்டங்களுக்குக் கிடைத்த வெற்றியாக இதனைப் பார்க்கின்றனர் . நெடுவாசல் மக்கள் தமிழகத்தில் வேறு எங்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்கக் கூடாது என்றும் தமிழக அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஜெம் நிறுவனம், ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட்டதாகக் கூறப்பட்டாலும், அதில் உண்மையில்லை என்றும், நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தைத்தான் கைவிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது .

நெடுவாசலைத் தவிர்த்து வேறு இடம் வழங்க வேண்டும் என்று மத்திய எரிவாயு மற்றும் பெட்ரோலியத்துறை அமைச்சகத்துக்கு
ஜெம் நிறுவனம் கடிதம் அனுப்பியது. அதற்கு இதுவரை பதில் வரவில்லை என்றும் கூறப்படுகிறது

நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிரான வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நிலுவையில் இருக்கிறது

ஹைட்ரோகார்பன் திட்டத்துக்காக ஓஎன்ஜிசிக்கு வழங்கப்பட்டகுத்தகையை, தமிழக அரசு தங்களுக்கு இதுவரை மாற்றித்தரவில்லை என்றும், இதனால் ஜெம் நிறுவனதுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது .

இது குறித்து ஜெம் தனியார் நிறுவனத்தின் உயர் அதிகாரி செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பேசுகையில், நெடுவாசலில் நடத்தப்பட்ட தொடர் போராட்டங்கள் காரணமாக ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை. இதையடுத்து, நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிடுவது குறித்து இந்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

நெடுவாசலுக்கு பதிலாக இந்திய அரசு வேறு எந்த இடத்தைக் கொடுத்தாலும் அங்கு ஹைட்ரோகார்பன் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறினார் .

நெடுவாசல் மக்கள் இது குறித்து பேசும் போது நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிட்டதாக மத்திய அரசும் , தமிழக அரசும் என்றைக்கு அறிவிக்கின்றதோ அன்றுதான் நாங்கள் வெற்றி பெற்றதாக கருதுவோம் என்றும் கூறினர்

இதையும் படியுங்கள்: “பாஸ்வேர்டை மாற்றுங்கள்” – பயனர்களுக்கு டிவிட்டர் எச்சரிக்கை

இதையும் படியுங்கள்: #BanSterlite: “மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை மூடிட்டுப் போக வேண்டியதுதானே”

இதையும் படியுங்கள்: மக்களின் வரிப்பணம் 198 கோடி ரூபாய் வீண்; 580 கேள்விகளில் 17 கேள்விகளுக்கு மட்டுமே பதில்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here