தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா.
இந்தியாவில் மிகவும் வெற்றிகரமான வெப்சீரிஸ்களில் ஒன்றான ‘ஃபேமிலிமேன்’ என்ற வெப் சீரிஸில் சமந்தா நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கடந்தசில நாட்களுக்கு முன்னர் சமந்தா தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் ‘தி ஃபேமிலி மேன்’ வெப் சீரிஸ் சீசன் 2 வருகிற பிப்ரவரி 12 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவித்திருந்தார்.
இதுகுறித்து சமீபத்தில் பேட்டியளித்த சமந்தா, “என்னை குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் பார்த்து பழக்கப்பட்டவர்களுக்கு இது வேறுமாதிரி இருக்கும். பல விதிமுறைகளை உடைத்து இருக்கிறேன், இந்த தொடரில் சண்டை காட்சிகளிலும் நடித்து இருக்கிறேன் எனக் கூறியிருந்தார். இந்த நிலையில் ‘ஃபேமிலிமேன்’ -2 வெப் சீரிஸின் டீஸர் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை சமந்தா பகிர்ந்துள்ளார்.
இந்தவெப் சீரிஸ் மூலம் டிஜிட்டல் தளத்தில் அறிமுகமாகிறார் நடிகை சமந்தா.
2020ஆம் ஆண்டில் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிடப்பட்ட “தி பேமிலி மேன்” என்ற வெப் சீரிஸ் முதல் பாகம் பிகவும் பிரபலம் அடைந்த நிலையில் அதன் இரண்டாம் பாகம் தயாரிக்கும் பணியானது நடைபெற்று வந்தது. இதனை இயக்குநர்கள் ராஜ் & டிகேஇயக்கி உள்ளனர்.
மனோஜ் பாஜ்பாய் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் தேவதர்ஷினி, மைம்கோபி, அழகம் பெருமாள், பிரியாமணி, ஷரிப்ஹஸ்மி, நீரஜ் மாதவ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த சீரிஸின்டிரெய்லர் வரும் ஜன., 19 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வ தகவல் அளித்துள்ளனர். பிப்., 12 ஆம் தேதி முதல் ‘ஃபேமிலி மேன்’ -2 சீரிஸின் தொடர்கள் அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது.