நிலவின் மீது படவேண்டிய சூரிய ஒளியை பூமி குறுக்கே வந்து மறைத்துக் கொள்ளும் போது சூரியன், பூமி, நிலவு மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வருவதுதான் சந்திரகிரகணம்.

இந்த நூற்றாண்டின் மிக நீண்ட நேரம் கொண்ட சந்திர கிரகணம் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 11.54 மணிக்கு தோன்ற ஆரம்பித்தது.
நள்ளிரவு 11.54 மணிக்குத் தொடங்கிய சந்திர கிரகணம் இன்று( சனிக்கிழமை) அதிகாலை 2.43 மணி வரை நீடித்தது.

சென்னை பிர்லா கோளரங்கத்தில் சந்திரகிரகணத்தைக் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

சந்திரகிரகணத்தை வெறும் கண்ணால் பார்ப்பதில் எந்த ஆபத்தும் இல்லை என்று அறிவியல் வல்லுனர்கள் தெரிவித்தனர்.
நேற்றிரவு நிகழ்ந்த சந்திரகிரகணம் உலகின் பல்வேறு பகுதிகளில் கண்டுகளிக்கப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய், ஆஸ்திரேலிய, கிரேக்க நாட்டின் ஏதென்ஸ், ஆகிய நகரங்களில் சந்திர கிரகணம் பூரணமாக தெரிந்தது.

கிரேக்க நாட்டின் கேப் சௌனியன் பகுதியில் பழைமை வாய்ந்த ஆலயத்தின் மீதும் அங்குள்ள மலைகள் மீதும் கிரகணத்தால் பிடிக்கப்பட்ட நிலவு காட்சியளித்தது.

இனி இதுபோன்ற நீண்ட நேரம் நிகழும் முழு சந்திர கிரகணம் 2029 ஜூன் 25 ஆம் தேதிதான் நிகழும். அதுவும் 102 நிமிடங்கள் நீடிக்கும் என்று தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்