(கவனிக்கவும்: இது விளம்பரதாரர் அறிவிப்பு; இதனை உருவாக்கியவர்கள், செய்தியாளர்கள் அல்லாத பிற எழுத்தாளர்கள்)

சென்னைப் பெருநகரத்தில் பெரிய ஸ்டார் ஹோட்டல்களிலிருந்து சாதாரண மளிகைக் கடைகள் வரைக்கும் பல வகை சாஸ்கள், நூடுல்ஸ்கள், பதப்படுத்தப்பட்ட ஜூஸ்கள் வினியோகம் செய்யும் நிறுவனம் பாரமவுன்ட் டிரேடர்ஸ் மற்றும் சங்கு சக்ரா ஃபுட்ஸ்; இந்த நிறுவனங்களை உருவாக்கியவர் திருசங்கு. வள்ளியூரைச் சேர்ந்தவர்; 1970களில் சென்னைக்கு வந்தபோது உணவுப் பொருள்களைத் தலையில் சுமந்தும் சைக்கிளில் எடுத்துச் சென்றும் விற்பனை செய்திருக்கிறார். இப்போது 35 பேருக்கு வேலை கொடுக்கும் அளவுக்கு வளர்ச்சி கண்டிருக்கிறார்.

கோடம்பாக்கத்தில் பதப்படுத்தப்பட்ட உணவுத் தொழிற்சாலை நடத்துவது ஒரு வகையில் பெரிய வரப்பிரசாதம்தான்; “சிட்டியில் எங்கிருந்து வேண்டுமானாலும் இங்கு சுலபமாக வந்து வாங்கிச் செல்கிறார்கள்; இது தெய்வ அனுக்கிரகம்,” என்கிறார் திருசங்கு. இவர்கள் சப்ளை செய்யும் சீனா ஸ்டைல் வெஜிட்டேரியன் நூடுல்ஸ், எக் நூடுல்ஸ் எல்லாவற்றுக்கும் எப்போதுமே டிமாண்ட் இருக்கும்; வகை வகையான சாஸ்களுக்கும் பதப்படுத்தப்பட்ட ஜூஸ் வகைகளுக்கும் பெரிய வினியோகஸ்தர் இவர்தான்.

இளம் வயதில் தவறிவிட்ட மகன் சதீஷ் பெயரில் அறக்கட்டளை நடத்தி சமூகத்துக்கும் ஆன்மிகக் காரியங்களுக்கும் நன்கொடைகள் வழங்கி வருகிறார் திருசங்கு. ”கடும் உழைப்பு”, ”தரம் நிரந்தரம்” என்பவைதான் இவருடைய மந்திரச் சொற்கள். இவற்றுக்கெல்லாம் மேலானது, “தெய்வத்தின் அருள்.” “தரத்தை உறுதி செய்ய வேண்டுமானால் எங்கிருந்து மூலப்பொருள்களை வாங்குகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்” என்கிறார். தினேஷ் இப்போது தந்தைக்குத் தொழிலில் ஒத்தாசை செய்கிறார்.

பாரமவுண்ட் டிரேடர்ஸ்
61/57E, சொர்ணாம்பிகை தெரு,
சிவன் கோவில் எதிரில்,
கோடம்பாக்கம், சென்னை – 600024
04424841580, 04424811069, 9444411069

(DISCLAIMER: THIS IS A NATIVE AD CONTENT. SPONSORED BY THE ADVERTISER)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here