நீலகிரியில் யானை நடமாடும் பாதையில் அமைந்திருக்கும் 11 ஹோட்டல்கள் மற்றும் ரிசார்ட்டுகளை 48 மணி நேரத்தில் மூட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீலகிரியில் யானைகள் நடமாடும் வழித் தடத்தில் சொகுசு ஓட்டல்கள் மற்றும் ரிசார்ட் கட்டப்பட்டுள்ளதாக தொடுக்கப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. சட்டத்துக்குப் புறம்பாக கட்டுமானங்கள் செய்யப்பட்டிருப்பதாகக் கூறி இந்த உத்தரவு போடப்பட்டுள்ளது.

நீதிபதி மதன் பி லோகூர் தலைமையிலான அமர்வு 24 மணி நேரத்திற்குள் யானை வழித்தடத்தில் அமைக்கப்பட்டுள்ள சொகுசு ஹோட்டல்கள் மற்றும் ரிசார்ட்டுகளின் சொந்தக்காரர்கள், கட்டுமானம் அமைக்க ஒப்புதல் பெற்ற ஆவணங்களை அம்மாவட்ட கலெக்டரிடம் சம்ர்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

கலெக்டர் அந்த ஆவணங்களை ஆராய்ந்த பிறகு அவை முறையே ஒப்புதல் பெறாத பட்சத்தில் , ஒப்புதல் பெறாமல் கட்டப்பட்டிருக்கும் சொகுசு ஹோட்டல்கள் மற்றும் ரிசார்ட்டுகளை அடுத்த 48 மணி நேரத்தில் இழுத்து மூட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் யானைவழித்தடங்களில் கட்டப்பட்டுள்ள சொகுசு ஹோட்டல்கள், மற்றும் ரிசார்ட்டுகள் எப்போது , எப்படி கட்டப்பட்டது என்பதை பற்றிய அறிக்கை ஒன்றை அம்மாவட்ட கலெக்டர் சமர்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

எதிர்காலத்தில் யானைவழித்தடங்களில் ஹோட்டல்கள் மற்றும் ரிசார்ட்டுகள் கட்ட ஒப்புதல் கொடுக்க வேண்டாம் என்றும் உத்தரவிட்டுள்ளது.

Courtesy : Business Standard

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்