நீரில் மூழ்கிய விபத்து மறக்க முடியாதது: ஜாக்கிசான்

Jackie Chan survived a near drowning experience while filming a scene for his upcoming film, Vanguard.

0
41

ஜாக்கிசான்(66) நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வேன்கார்ட்’. இப்படத்தை ஸ்டான்லி டாங் என்பவர் இயக்கி வருகிறார். கொரோனாவால் பாதியில் நிறுத்தப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் தற்போது மீண்டும் சீனாவில் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், வான்கார்டு என்ற திரைப்படம் வரும், 30 ஆம் தேதி, வெளியாகிறது. இதையொட்டி நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், படப்பிடிப்பு அனுபவங்களை, ஜாக்கி சான் பகிர்ந்து கொண்டார்.

அப்போது அவர் கூறியதாவது:

வான்கார்டு படம், துபாய், தைவான் உள்ளிட்டநாடுகளில் எடுக்கப்பட்டது. இந்த படத்திலும், வழக்கம் போலசண்டை காட்சிகளில் பல விபத்துக்களை சந்தித்தேன். அவற்றில் நீரில் மூழ்கிய விபத்துமறக்க முடியாதது. ஜெட்ஸ்கை எனப்படும், ஒருவகை படகில்நடிகை, மியா முகியுடன் வேகமாக செல்லும் காட்சி படமாக்கப்பட்டது.அப்போது, ஒரு சிறிய பாறையில் இடித்து படகு கவிழ்ந்தது. நான் நீரில் மூழ்கினேன்.

அதன் பின் நடந்ததை படக் குழுவினர் தான் தெரிவித்தனர். நீரில் மூழ்கியதும், மியா முகி உடனே, மேலே வந்துவிட்டார். நான், படகுடன் இணைக்கப்பட்டிருந்ததால், வெளிவர முடியமல்,47 வினாடிகள் வரை நீரில் மூழ்கியிருந்திருக்கிறேன். ஏதே ஒரு தெய்வீக சக்தி என்னை காப்பாற்றியுள்ளது. என்னையும் அறியாமல், படகுடன் இருந்த தொடர்பை விடுவித்துக் கொண்ட உடன், தன்னிச்சையாக கடல் மட்டத்திற்கு மேலே வந்துள்ளேன்.

அதுவரை என்னை காணாததால், படக் குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலே வந்தபின், இயக்குனர், ஸ்டான்லி டாங் கண்ணிர் நீர் கசிய என்னை கட்டித் தழுவி கொண்டார் என ஜாக்கி சான் தெரிவித்தார்.

இந்தக் காட்சிகள் சீனத் தொலைகாட்சி, மற்றும் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகியுள்ளன. பொதுவாக தான் நடிக்கும் திரைப்படங்களில் இடம்பெறும் சாகசக் காட்சிகளில் டூப் இல்லாமல் நடிப்பவர் ஜாக்கி சான். இந்தநிலையில் ஜாக்கி சானுக்கு ஏற்பட்ட இந்த விபத்துக்கு அவரது ரசிகர்கள் பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here