பஞ்சாப் நேஷல் வங்கி ஊழல் விவகாரத்தில் சிக்கிய வைர வியபாரி நீரவ் மோடியின் பாஸ்போர்ட்டை மத்திய அரசு முடக்கியுள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையொன்றில் 11,400 கோடி ரூபாய் வரை முறைகேடாக பரிவர்த்தனை நடைபெற்றதாக, அந்த வங்கியின் நிர்வாகம் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்திற்கு தகவல் தெரிவித்தது. மேலும் சிபிஐயிடம் புகாரும் அளித்தது. இந்த முறைகேட்டில் ஈடுபட்ட வைர வியாபாரியான நீரவ் மோடி, மீது அமலாக்கத்துறையினர் மற்றும் சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் நீரவ் மோடியின் மனைவி அமி மோடி, சகோதரர் நிஷால் மோடி, அவரது உறவினர் மெஹூல் சோக்ஸி ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால் நீரவ் மோடி, வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுவிட்டார்.

இந்நிலையில், வைர வியபாரி நீரவ் மோடியின் பாஸ்போர்ட்டை மத்திய அரசு முடக்கியுள்ளது. முன்னதாக கடந்த ஜனவரி முதல் வாரத்திலேயே, நீரவ் மோடி, அவரது மனைவி ஆகியோர் இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டதாகக் கூறப்படுகிறது. நீரவ் மனைவி அமி, ஏற்கனவே அமெரிக்கக் குடியுரிமை பெற்றவராக உள்ளார் என்றும், அதே போன்று நீரவ் மோடி பெல்ஜியம் பாஸ்போர்ட் பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்: ஒக்கி பேரிடர்: கரம் கோர்ப்போம்; கட்டியணைப்போம்