நீதிமன்ற உத்தரவை காண்பித்து காவல்துறை உதவியோடு இடிக்கப்படும் 77 குடியிருப்புகள்

0
265

சென்னை வள்ளுவர் கோட்டம் தங்கவேல் தெரு பகுதியில் உள்ள குடியிருப்புகளை காவல்துறை உதவியுடன் மாநகராட்சி ஊழியர்கள் அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதை தடுக்க முயன்ற மக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டுள்ளது.

மாநரகாட்சிக்கு சொந்தமான இடத்தில் குடியிருப்புகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும், இந்த இடத்தை காலி செய்ய வேண்டும் என்று பலமுறை மாநராகராட்சி கேட்டுக்கொண்டதாகவும் சென்னை மாநகராட்சி தரப்பில் கூறப்படுகிறது. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலேயே ஆக்கிரமிப்பு அகற்றப்படுவதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள் : 👇

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஜி.செல்வா தனது முகநூல் (Facebook) பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் “ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி, வள்ளுவர் கோட்டம் எதிரில், தர்மாபுரம் தங்கவேல் தெரு பகுதியில் 50 ஆண்டுகளுக்கு மேல் குடியிருந்த மக்களை, நீதிமன்ற உத்தரவை காண்பித்து வலுக்கட்டாயமாக காவல்துறை உதவியோடு 77 குடியிருப்புகள் இடிக்கப்படுகின்றன” என்ற தெரிவித்துள்ளார்.

மேலும் “சென்னைக்கு வெளியே 40 கிலோமீட்டர் தொலைவில் எழில் நகரில் ஒதுக்காமல், சென்னைக்கு உள்ளே வீடுகளை (ஒதுக்க வேண்டும் என்று) கேட்டு கோஷம் போட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்களை காவல்துறை தாக்கி உள்ளனர். பகுதி குழு உறுப்பினர் சிவக்குமார் மற்றும் வயதான பெண் உள்ளிட்ட பொதுமக்கள் 4 பேரை சமூக நலக் கூடத்தில் (காவல்துறையினர்) அடைத்து வைத்திருக்கின்றனர்” என்று செல்வா தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள் : 👇

“தேர்தலின் போது சென்னைக்கு உள் வீடுகள் ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக சட்டமன்ற உறுப்பினர் (மருத்துவர் எழிலன்) கொடுத்த வாக்குறுதி வாயளவில் நிற்க. இன்று வீடுகள் கண்ணெதிரே இடிக்க, காவல்துறையின் அடக்குமுறைகளோடு மக்கள் நடுத்தெருவில்.” என்று செல்வா தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சொந்த தொகுதியான கொளத்தூரில் உள்ள அவ்வை நகர் பகுதியில், குடியிருப்புகளை அகற்றக் கூடாது என்று கடந்த 5 நாட்களாக போராட்டம் நடத்தி வந்த மக்களை காவல்துறையினர் இன்று காலை கைது செய்துள்ளதாக நகர்புற குடியிருப்பு மற்றும் நிலவுரிமை கூட்டமைப்பினர் கூறியுள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் “60 ஆண்டுகளாக வாழ்ந்த குடியிருப்புகளை பாதுகாத்திட நடத்தப்படும் மக்கள் போராட்டத்தை, தமிழக அரசு காவல் துறை வன்முறை மூலம் ஓடுக்குகிறது” என்றும் “நீர்நிலையில் ஆக்கிரமிப்பு என்று பச்சை போய் சொல்லி பூர்வக்குடி மக்களை வெளியேற்றுவதை வன்மையாக கண்டிக்கிறோம்” என்றும் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here