நீதிமன்றத்தில் ’சோ’ கூறியது என்ன? குறுக்கு விசாரணை செய்த வழக்கறிஞர் துரைசாமி பேட்டி

0
315

சேலத்தில் நடந்த ராமர், சீதா உருவபொம்மைகள் அவமதிப்பு வழக்கில் சோ-வை குறுக்கு விசாரணை செய்த வழக்கறிஞர் துரைசாமி நடந்ததுஎன்ன? என்பது குறித்து விரிவான விளக்கம் அளித்துள்ளார்.

ராமலீலா என்ற பெயரில் இராவணன் உருவ பொம்மை வட இந்தியாவில் எரிக்கப்பட்டு வந்தது. அது தமிழர்களை அவமதிக்கும் வகையில் உள்ளதாக கூறி அதை கைவிடும்படி திராவிட இயக்கங்கன் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தனர்.

கோரிக்கையை மத்திய அரசு கண்டு கொள்ளாததால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமர், சீதை, லட்சுமணர் உருவ பொம்மைகளை எரிக்கும் முயற்சியாக 1971-ம் வருடம் சேலத்தில் பெரியார் நடத்திய பேரணியில் அந்த உருவ பொம்மைகள் கொண்டு வரப்பட்டன. அவை வைக்கோல் நிரப்பப்பட்ட பொம்மைகள் தானே தவிர, அதில் நிர்வாணம் என்று எதுவும் கிடையாது.

இந்த பேரணிக்கு கருப்பு கொடி காட்டுவதற்கு சங் பரிவார் அமைப்பினருக்கு சேலம் காவல்துறை அனுமதி வழங்கியது. பேரணி நடக்கும்போது, காவல்துறை அனுமதித்த இடத்தை விட்டு வேறொரு இடத்தில் சங் பரிவார் அமைப்பினர் மறைந்திருந்து பெரியார் மீது செருப்பை வீசியுள்ளனர்.

அது குறிதவறி உருவ பொம்மைகள் கொண்டுவரப்பட்ட வாகனத்தில் விழுந்தது. அந்த வாகனத்தில் இருந்த இயக்க உறுப்பினர் ஒருவர் அந்த செருப்பை எடுத்து ராமர் உருவ பொம்மையை சில அடிகள் அடித்தார். இவ்வளவு தான் நடந்தது.

பெரியார் ராமரை செருப்பால் அடித்ததை நேரில் பார்க்கவில்லை; சங்பரிவார் அமைப்பினர் கூறியதை வைத்தே துக்ளக்கில் செய்தி வெளியிட்டோம் என சோ நீதிமன்றத்தில் கூறினார்” குறுக்கு விசாரணை செய்த வழக்கறிஞர் பேட்டி

இந்த சம்பவம் பற்றி சங் பரிவார் அமைப்பினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் துக்ளக் செய்தி வெளியிட்டது. பின்னர், இந்த சம்பவம் குறித்து சேலம் காவல்துறையில் சங் பரிவார் அமைப்பினர் கொடுத்த புகார் மனு நிராகரிக்கப்பட்டது. அதன் பின்னர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின் போது ஆஜரான துக்ளக் ஆசிரியர் சோ, ராமர் படத்தை பெரியார் செருப்பால் அடித்தார் என்பதை நேரில் பார்க்கவில்லை. சங்பரிவார் அமைப்புகள் கூறியதை நான் துக்ளக்கில் படமாக வெளியிட்டோம். தன்னிடம் அந்த சம்பவம் தொடர்பாக எந்த ஆதாரமும் கிடையாது.

பெரியார் மீது செருப்பை வீசியது தவறு, அதற்காக சங்பரிவார் அமைப்புகள் சார்பில் மன்னிப்பு கேட்கிறேன் என்று நீதிமன்றத்தில் கூறியதாக துரைசாமி தெரிவித்துள்ளார். ரஜினி பேசியது முழுக்க முழுக்க பொய்யான ஒன்று என்றும் துரைசாமி கூறினார்.

இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

 https://tamil.news18.com/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here