சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக இருந்த வி.கே. தஹில் ரமானி மேகாலயா ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.  சுப்ரீம் கோர்ட்டின் கொலீஜியத்தின் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என அவர் விடுத்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. இதனால் அதிருப்தியில் இருந்த தலைமை நீதிபதி தஹில் ரமாணி தனது ‌ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார்.

ஆனால் அவரது ராஜினாமா கடிதம் மீது ஜனாதிபதியின் முடிவு குறித்து எந்த உறுதியான தகவலும் வெளியாகவில்லை. அதேசமயம் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட வேண்டிய வழக்குகளின் விசாரணை நடத்தப்படவில்லை.

கொலீஜியத்தின்பரிந்துரை மற்றும் தனது பதவி விலகல் கடிதத்தின் மீது ஜனாதிபதி முடிவு எடுக்கும் வரை வழக்குகளை விசாரிப்பதில் இருந்தும், ஐகோர்ட்டின் நிர்வாக நடவடிக்கையில் இருந்தும் தலைமை நீதிபதி தஹில் ரமானி விலகி இருந்தார்.

இந்நிலையில், தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டுள்ளார். தலைமை நீதிபதியின் ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டதாக மத்திய சட்ட அமைச்சகம் அறிவித்துள்ளது.

மேலும் மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக பொறுப்பு வகிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here