கேரள மாநிலத்தைப் பொறுத்தவரையில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சம வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதனைத் தற்போது கேரள உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்றங்களுக்கான நீதிபதிகள் பட்டியலும் உறுதிப்படுத்தியுள்ளது.

1. மாவட்ட உரிமையியில் நீதிமன்றங்களுக்கான நீதிபதிகளைத் தேர்வு செய்வதற்கான பட்டியலை கேரள மாநில உயர்நீதிமன்றம் வெளியிட்டது. மொத்தம் 68 பேர் தகுதிகளின் அடிப்படிடையில் நேரடித் தேர்விற்குத் தகுதி பெற்றுள்ளனர். அதில் 44 பேர் பெண்கள். 24 பேர் ஆண்கள்.

2. கேரள உயர்நீதிமன்றத்தில் தற்போது நான்கு பெண் நீதிபதிகள் உள்ளனர்.

3. இந்தியாவில் உயர்நீதிமன்ற முதல் பெண் நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் அன்னா சாண்டி. இவர் 1959ஆம் ஆண்டில் கேரள மாநில உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவியேற்றார்.

4. உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி ஃபாத்திமா பீவி ஆவார். இவரும் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவராவார்.

5. தற்போது உச்சநீதிமன்றத்தில் உள்ள 27 நீதிபதிகளில் ஆர்.பானுமதி மட்டுமே பெண் நீதிபதி.

இதையும் படியுங்கள்: ”பிக் பாஸ் எதிர்மறை உணர்வுகளைத் தூண்டி எளிதாக ஜெயிக்கிறது”

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்