உச்ச நீதிமன்ற உத்தரவுபடி நாளை முதல் கார் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு நீண்டகால அடிப்படையிலான இன்சூரன்ஸ் திட்டம் அமலாகிறது. இதனால் கார் மற்றும் இருசக்கர வாகனங்களின் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது.

சாலை விபத்துகளால் வாகனங்களில் பயணம் செய்யாமல் சாலைகளில் நடந்துபோவோர், மற்ற வாகனங்களில் செல்வோருக்கும் காயம் மற்றும் உயிரிழப்பு ஏற்படுகிறது. இதுபோன்ற மூன்றாம் நபர்கள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு இன்சூரன்ஸ் விதிமுறைகள் படி இழப்பிடு வழங்க வகை செய்யப்படுகிறது.

மோட்டார் வாகனச் சட்டப்படி ‘தேர்டு பார்ட்டி எனப்படும் மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் கட்டாயம். அனைத்து வாகனங்களுக்கும் இந்த மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் கட்டாயம் ஆகும்.

வாகனங்கள் விற்பனை செய்யும்போதே நீண்டகால அடிப்படையில் இதனை செயல்படுத்தவது கட்டாயம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அமலுக்கு வருகிறது.

இதன்படி, செப்டம்பர் 1-ம் தேதியான நாளை முதல் விற்பனையாகும் புதிய கார் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு நீண்டகால மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் திட்டம் கட்டாயம் ஆகிறது. இந்த இன்சூரன்ஸ் திட்டம் கார்களுக்கு 3 ஆண்டுகளாகவும், இரு சக்கர வாகனங்களுக்கு 5 ஆண்டுகளாகவும் இருக்கும்.

1) 1,000 சி.சி.க்கு குறைவான என்ஜின் திறன் கொண்ட கார்களுக்கு 3 ஆண்டுகளுக்கான மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் தொகை ரூ.5,286 ஆகும். 1,000 முதல் 1,500 சிசி வரையிலான என்ஜின் திறன் கொண்ட கார்களுக்கான மூன்றாம் நபர் காப்பீடு தொகை ரூ.9,534 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2) 1,500 சி.சி.க்கும் அதிகமான என்ஜின் திறன் கொண்ட கார்களுக்கான மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் தொகை ரூ.24,305 ஆகும். இரு சக்கர வாகனங்களுக்கு, 75 சிசி இன்ஜின் திறனுக்கு குறைவான வாகனங்களுக்கு 5 ஆண்டுகளுக்கான மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் தொகை ரூ.1,045 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

3) 75 முதல் 150 சிசி இன்ஜின் திறன் கொண்ட வாகனங்களுக்கு ரூ.3,285 ஆகவும், 150 முதல் 350 சிசி கொண்ட இருசக்கர வாகனங்களுக்கு ரூ.5,453 ஆகவும் வசூலிக்கப்படும். 350 சிசிக்கு மேற்பட்ட வாகனங்களுக்கு மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் தொகை ரூ.13,034 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

நீண்டகால இன்சூரன்ஸ் திட்டம், காரணமாக பொதுவாக கார் மற்றும் இரு சக்கர வாகனங்களின் விலை உயரும். ஆனால் 1,000 சி.சி.க்கு குறைவான என்ஜின் திறன் கொண்ட கார்கள் மற்றும் 75 சி.சி.க்கு குறைவான என்ஜின் திறன் கொண்ட இரு சக்கர வாகனங்களின் விலை குறைய வாய்ப்புள்ளது.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here