நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கு நடைபெற்ற நீட்நுழைவுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகின்றன என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது .

நாடு முழுவதும் உள்ள எம்.பி.பி. எஸ்., பிடிஎஸ் இயற்கை மருத்துவம் போன்றவற்றுக்கான நீட் நுழைவுத் தேர்வு, வெளிநாட்டில் மருத்துவம் படிக்கச் செல்லும் மாணவர்கள் ஆகியோருக்கான நீட் நுழைவுத் தேர்வு மே 6 -ஆம் தேதி நடைபெற்றது.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்திய இந்தத் தேர்வில் 13 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் நாடு முழுவதிலும் இருந்தும் தமிழகத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்று தேர்வெழுதினர்.

தேர்வுக்கான விடைகள் பட்டியல் சிபிஎஸ்இ இணையதளத்தில் மே 25 -ஆம் தேதி வெளியிடப்பட்டு அந்தப் பட்டியலில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அதனை தெரிவிக்கும்படியும் அறிவிக்கப்பட்டது.

மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை cbseneet.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்