நீட் தேர்வை இனி சிபிஎஸ்இ நடத்தாது என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மூலம் நடத்தப்படுகிறது.

நீட் தேர்வினை நடத்தும் சிபிஎஸ்இ நீட் தேர்வுக்கு வினாதாள்கள் தயாரித்ததில் சரியான மொழிபெயர்ப்பு இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. நீட் தேர்வு தொடர்மான வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ள நிலையில், நீட் தேர்வை இனி சிபிஎஸ்இ நடத்தாது என்ற அறிவிப்பை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

2019-ஆம் ஆண்டிற்கான நீட் தேர்வை நடத்த தேசிய தேர்வு முகமை நடத்தும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

மேலும், மாணவர்கள் நீட் தேர்வை இனி வரும் காலங்களில் ஆன்லைனில் எழுதுவது குறித்து பரிசீலித்து வருவதாகவும், அதற்கான நடைமுறைகள் குறித்து தொடர்ந்து அறிவிப்புகள் வெளியாக உள்ளன என்று மத்திய மனிதவள மேம்பாட்டுதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்