கடந்த மே மாதம் 6-ஆம் தேதி மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக இந்தியா முழுவதும் சி.பி.எஸ்.இ. சார்பில் ‘நீட்’ தேர்வு நட்த்தப்பட்டு நாடு முழுவதும் 12 லட்சத்து 69 ஆயிரத்து 922 பேர் தேர்வு எழுதினார்கள். இந்த தேர்வு முடிவு நேற்று (திங்கள்கிழமை) வெளியிடப்பட்டது.

cbs-e-r-esults.nic.in, www.cbs-e-n-eet.nic.in, www.cbse.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவு வெளியானது.

iuSenRCl

மருத்துவப் படிப்புக்கு நடைபெற்ற நீட் தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மாணவி கல்பனா குமாரி 720 மதிப்பெண்ணுக்கு நடைபெற்ற தேர்வில் 691 மதிப்பெண் பெற்று பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மாணவி கல்பனா குமாரி இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.

De2zedhV4AESL2L

சென்னை கே.கே. நகர் பத்ம சேஷாத்ரி சிபிஎஸ்இ பள்ளி மாணவி கே.கீர்த்தனா நீட் தேர்வில் 676 மதிப்பெண் பெற்று இந்திய அளவில் 12-வது இடத்தைப் பிடித்துள்ளார். உயிரியல்-வேதியியல்-இயற்பியல் என மொத்தம்

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ரோகன் புரோஹித் என்ற மாணவரும், டில்லியைச் சேர்ந்த ஹிமான்சூ ஷர்மா என்ற மாணவரும் 690 மதிப்பெண்ணைப் பெற்று இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளனர்.

நீட் தேர்வு மே 6-ஆம் தேதி நடைபெற்றது. 12 லட்சத்து 69, 922 பேர் நீட் தேர்வு எழுதினர். தேர்வெழுதிய மாணவர்களில் 7 லட்சத்து 14,562 மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒரு திருநங்கை தேர்வெழுதியுள்ளார். தேர்வெழுதிய திருநங்கை மாணவி தேர்ச்சிபெற்றுள்ளார் .

தமிழகத்தில் , 1 லட்சத்து 14,602 மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர். அவர்களில் 45,336 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். நீட் தேர்வில் இந்திய அளவில் முதல் 50 இடங்களைப் பெற்றவர்களுக்கான பட்டியலை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது.

நீட் தேர்வில் அனைத்துப் பிரிவினருக்கான (ஓ.சி.) தகுதி மதிப்பெண் 119-ஆகவும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட
வகுப்பினர் (ஓபிசி), தாழ்த்தப்பட்ட, பழங்குடி வகுப்பினருக்கான மதிப்பெண் 96-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்தகைய தகுதி மதிப்பெண்ணைப் பெற்ற மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றதாகக் கருதப்பட்டு மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்க முடியும்.

அனைத்துப் பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கான 50 சதமான தேர்ச்சியின் அடிப்படையில் 691 முதல் 119 மதிப்பெண் வரை 6.34 லட்சம் பேர் பெற்றுள்ளனர்.அனைத்து பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான 40 சதமான தேர்ச்சியின் அடிப்படையில் 118 முதல் 96 வரை பெற்று 54,653 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான 40 சதமானத்தின் அடிப்படையில் 118 முதல் 96 வரை பெற்று 17,209 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பழங்குடியின மாணவர்களுக்கான 40 சதமானத்தின் அடிப்படையில் 118 முதல் 96 மதிப்பெண் வரை பெற்று 7446 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நாடு முழுவதும் 476 மருத்துவக் கல்லூரிகளில் 61,390 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. அதே போன்று 308 பல் மருத்துவக் கல்லூரிகளில் 25,730 இடங்கள் உள்ளன. இவற்றில் அகில இந்திய ஒதுக்கீடு,மாநில அரசின் ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீடு இடங்கள் என அனைத்து இடங்களும் நீட்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.

மேலதிக விவரங்களுக்கு www.mcc.nic.in எனும் இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்