நீட் தேர்வு ரத்து இல்லை ; நீட் தேர்வைத் தொடர்ந்து நடத்த அதிமுகவை சமாதானப்படுத்துவோம்- மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

0
121


நீட் தேர்வு தேவையில்லை என அதிமுக கூறவில்லை என தமிழக பாஜ பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் தெரிவித்தார். 

சென்னையில் செய்தியாளர்களுக்கு பியூஷ் கோயல் வெள்ளிக்கிழமை  அளித்த பேட்டியில், நீட் தேர்வு ரத்து செய்யப்படாது. நீட் தேர்வு தேவையில்லை என அதிமுக கூறவில்லை என்றும், நீட் தேர்வை தமிழில் எழுத வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்டோம் என்றார். 

மேலும், நீட் தேர்வை ரத்து செய்ய தேவையில்லை. நீட் தேர்வை தொடர்ந்து நடத்த அதிமுகவை சமாதானப்படுத்துவோம். அடுத்து அமையும் மோடி தலைமையிலான அரசில் தமிழக பிரதிநிதிகளின் குரல் எதிரொலிக்கும் என்றார் பியூஷ் கோயல்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here