விழுப்புரம் மாவட்டம் பெருவெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி பிரதீபா நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். இந்நிலையில், உயிருக்குப் போராடிய பிரதீபாவை பெற்றோரும், அக்கம் பக்கத்தினரும் அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பிரதீபா உயிரிழந்தார்.

De5TxzrVMAAHkCt

கூலித் தொழிலாளியின் மகளான பிரதீபா 12 ஆம் வகுப்பில் 1,125 மதிப்பெண்கள் எடுத்தவர். நேற்று (திங்கள்கிழமை) வெளியான நீட் தேர்வு முடிவில் அவர் 39 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.

2018-ஆம் ஆண்டின் மருத்துவப் படிப்பின் நுழைவுத்தேர்வான நீட் தேர்வு முடிவுகள் நேற்று (திங்கள்கிழமை) வெளியானது. அதில், இந்தியா முழுவதும் தேர்வு எழுதிய 13,26,725 பேரில் 7,14,598 பேர் கவுன்சலிங்குக்குத் தகுதி பெற்றுள்ளதாக சி.பி.எஸ்.இ அறிவித்துள்ளது. தமிழக மாணவர்கள் 1,14,602 பேர் தேர்வு எழுதினர். அவர்களில் 45,336 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்