நீட் தேர்வு (National Eligibility and Entrance Test – NEET) முடிவுகளை வெளியிடலாம் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

கடந்த மே மாதம் 7ஆம் தேதியன்று நாடு முழுவதும், மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதி நுழைவுத் தேர்வு நடைபெற்றது. இதனை 11 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணாவிகள் எழுதினர். தமிழகத்தில் மட்டும் 85 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதியிருந்தனர். மேலும், ஜூன் 8ஆம் தேதி, தேர்வு முடிவுகள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில், திருச்சியைச் சேர்ந்த சக்தி மலர்க்கொடி என்பவர், உயர்நிதிமன்ற மதுரைக்கிளையில், ஒரே மாதிரியான வினாத்தாள் அடிப்படையில் நீட் தேர்வு நடைபெறவில்லை என்பதால், தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்கக்கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவினை விசாரித்த உயர்நீதிமன்றம், தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்று உத்தரவிட்டது. மேலும், சிபிஎஸ்இ செயலாளர் மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் வரும் ஜூன் மாதம் 7ஆம் தேதிக்குள் பதில் மனுத்தாக்கல் செய்யவும், கடந்த மே மாதம் 24ஆம் தேதி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

Supreme-Court-of-India

இந்நிலையில், இந்த உத்தரவினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இ தரப்பில்
மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவினை விசாரித்த உச்சநீதிமன்றம், நீட் தேர்வு முடிவுகளை வெளியிடலாம் என்றும், மேலும் நீட் தொடர்பான வழக்குகளை மாநில உயர்நீதிமன்றங்கள் விசாரிக்க வேண்டாம் எனவும் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : “சீனாவில் தங்கலின் சாதனைக்கு இந்தியர்கள் பெருமிதம் கொள்ள வேண்டும்” – சீன அரசியல் தலைவர் பேச்சு

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்