மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தோ்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. தமிழகத்தில் இருந்து 1,14,602 பேர் நீட் தேர்வு எழுதியிருந்தனர். இவர்களில் 45,336 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் கீர்த்தனா என்ற மாணவி 676 மதிப்பெண்கள் பெற்று தமிழகத்தில் முதலிடத்தையும் இந்திய அளவில் 12-வது இடத்தையும் பிடித்தார்.

இந்நிலையில் நீட் தேர்வில் தேர்ச்சியடைய முடியாத விரக்தியில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சுபஸ்ரீ என்ற மாணவி தூக்கு போட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஏற்கனவே நீட் தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பிரதீபா என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டார். கூலித்தொழிலாளியின் மகளான பிரதீபா பிளஸ் டூ தேர்வில் 1125 மதிப்பெண்கள் எடுத்தும் நீட் தேர்வில் வெற்றி அடைய முடியாத விரக்தியில் அவர் தற்கொலை செய்துகொண்டது
தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பிரதீபா உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அதேபோல உயிரிழந்த மாணவி பிரதீபாவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் இரங்கல் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் திருச்சி நெம்பர் 1 டோல்கேட் பகுதியை சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் கண்ணன் என்பவரின் மகள் சுபஸ்ரீ நீட் தேர்வில் 24 மதிப்பெண்கள் எடுத்து தோல்வி அடைந்த விரக்தியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்