நீட் – ஜேஇஇ தேர்வு குறித்து பேசாமல் பொம்மை குறித்து பேசும் பிரதமர் : ராகுல் காந்தி விமர்சனம்

PM Modi, during Mann ki Baat, said toys were "very important for... children" and that the country should become a global leader in its manufacturing

0
283

மனதின் குரல் நிகழ்ச்சியில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தஞ்சாவூர் பொம்மைகள் குறித்து பேசினார். பொம்மைகள் தயாரிப்பை புதிய கல்விக் கொள்கையில் பாடமாக வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும், உள்நாட்டு விளையாட்டு பொம்மைகளுக்கு நல்ல பாரம்பரியம் உள்ளது என குறிப்பிட்டதாக கூறினார். தமிழகத்தில் பெம்மைகள் செய்யும் மையமாக தஞ்சாவூர் விளங்குகிறது என கூறியிருந்தார். கடந்த காலத்தை நினைவூட்டுவதும், எதிர்காலத்தை பிரகாசமாக்குவதும் பொம்மைகள். இந்தியாவில் தயாரிக்கப்படும் விளையாட்டு பொருட்கள் ஒற்றுமையை பறைசாற்றுகிறது.

விளையாட்டு பொம்மைகள் என்பது குழந்தைகளின் அறிவுத்திறனை வளர்க்கும் வகையில் இருக்க வேண்டும். பொம்மைகள் உருவாக்குவதை புதிய கல்வி கொள்கையில் ஒரு பாடமாக சேர்க்கப்பட்டுள்ளது எனபேசினார்.

இதுதொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் வெளியிட்ட டிவிட்டர் பதிவில் ஜேஇஇ – நீட் தேர்வு எழுத உள்ள மாணவர்கள், தேர்வு குறித்து ஆலோசிக்க விரும்புகின்றனர். ஆனால், பிரதமர் பொம்மைகள் குறித்து ஆலோசனை வழங்குகிறார் என பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here