நீங்க வெங்காயம் சாப்பிடுறீங்களா, இல்லையான்னு யாரு கேட்டா? நிதியமைச்சர் திறமையற்றவர் -விளாசிய ராகுல் காந்தி

0
508

மத்திய நிதியமைச்சர் என்ற முறையில், வெங்காயத்தின் விலை உயர்வு குறித்து, நிர்மலா சீதாராமனிடம் விளக்கம் கேட்டால், அவர் சம்மந்தம் இல்லாமல் பேசி வருகிறார் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலாய்த்துள்ளார்.

மக்களவையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி. சுப்ரியா சூலே, ”அரசி, பால் உள்ளிட்ட பல பொருட்களை நாம் ஏற்றுமதி செய்கிறோம். வெங்காய உற்பத்தி செய்யும் விவசாயிகள் பாதுகாக்கப்பட வேண்டும். வெங்காய உற்பத்தி குறைவதற்கான காரணம் என்ன” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு மத்திய நிதியமைச்சர் பதிலளித்து பேசிக் கொண்டிருக்கும் போது குறுக்கிட்ட மற்றொரு எம்.பி.,”நீங்களும் வெங்காயம் சாப்பிடுவீர்கள் தானே. உங்களுக்கு அதன் பாதிப்பு தெரியும் தானே” என்றார். அதற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், ”நான் வெங்காயமும் பூண்டும் அதிகமாக சாப்பிடுவதில்லை. வெங்காயம் மற்றும் பூண்டு அதிகம் சாப்பிடாத குடும்பத்தில் இருந்து வந்தவள் நான்” என்றார்.

மத்திய அமைச்சரின் இந்த பேச்சு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் நிதியமைச்சராக இருக்கும் ஒருவர், சாமானிய மக்களின் நிலையை புரிந்து கொண்டு அதற்கு பதிலளித்திருக்க வேண்டும். ஆனால், நிர்மலா சீதாராமனோ அதிமேதாவித்தனமாக செயல்படுவதாக காட்டிக் கொண்டு, தனது சாதியத்தை நாடாளுமன்றத்தில் எதிரொலித்துள்ளார் என்ற சர்ச்சை உருவாகியுள்ளது. 

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் திறமைமிக்கவர்கள் நிதி அமைச்சர்களாக பதவி வகித்தனர். அதனால், நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருந்தது . நிதி அமைச்சரின் வேலை அவர் என்ன சாப்பிடுகிறார் என்பதை சொல்வது அல்ல . உண்மையில் நாட்டில் என்ன நிலைமை என்று அவருக்கு எதுவும் தெரியவில்லை . ஆனால், தற்போது நாட்டின் பொருளாதார நிலைமை எந்த அளவுக்கு பரிதாபமாக உள்ளதென்பதை நாட்டு மக்கள் அனைவரும் அறிவார்கள் . நிர்மலா சீதாராமன் திறமையற்றவர் .  காங்கிரஸ் ஆட்சி காலத்தில்  கட்டி வைத்திருந்த அடித்தளம் முழுவதையும் பாஜக சிதைத்து விட்டது.

நாட்டின் நிதியமைச்சர் என்ற முறையில் தான், வெங்காயத்தின் விலைஉயர்வு  குறித்து நிர்மலா சீதாராமனிடம் கேள்வியெழுப்பப்பட்டது. தனிப்பட்ட முறையில் அவர் வெங்காயம் சாப்பிடுகிறாரா, இல்லையா என்று இங்கு யார் கேட்டார்?

வெங்காய விலை உயர்வைப் பற்றி நிதியமைச்சரிடம் கேட்டால் தான் வெங்காயம், பூண்டு  சாப்பிடமாட்டேன் என்பதை ஆணவத்தோடு சொல்கிறார்கள் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here