தேவையான பொருட்கள்:

மைதா – 250 கிராம்,
சர்க்கரை – 200 கிராம்,
சிறிய முட்டை – 5,
எண்ணெய் – 150 மி.லி.,
வனிலா எசென்ஸ் – 1,
உப்பு – அரை டீஸ்பூன்,
காய்ந்த திராட்சை – 100 கிராம்,
துருவிய கேரட் – 200 கிராம்,
பொடியாக நறுக்கிய நட்ஸ் – 50 கிராம்,
பட்டைத்தூள் – 1 டீஸ்பூன்,
பேக்கிங் பவுடர் – 1 டீஸ்பூன்.

கேரட் கேக் செய்முறை :

பாத்திரம் ஒன்றில் முட்டை, சர்க்கரை, எண்ணெய், எசென்ஸ் சேர்த்து வெளிர் மஞ்சள் நிறம் வரும்வரை எலெக்ட்ரிக் பீட்டர் கொண்டு அடிக்கவும்.

அத்துடன் மைதா, பேக்கிங் பவுடர், பட்டைத்தூள், நட்ஸ், உப்பு சேர்த்து ஹான்ட் பீட்டர் கொண்டு கட்டியில்லாமல் நன்கு கலக்கவும்.

அதன்பின்னர் கேரட் மற்றும் காய்ந்த திராட்சையை சேர்த்து வெண்ணெய் தடவிய கேக் டின்னில் ஊற்றி, 200 டிகிரி செல்சியஸில் 10 நிமிடங்கள் ப்ரீ ஹீட் செய்யப்பட்ட அவனில், 40-50 நிமிடங்கள் 150 டிகிரி செல்சியஸில் பேக் செய்யவும்.

ஆறியதும் ஐசிங் சுகர் கலவையை அதன் மேல் ஊற்றி, இறுகியதும் பரிமாறவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here