நீங்கள் நிர்மலா சீதாராமன் இல்லை ‘நிர்பலா சீதாராமன்’ – சர்ச்சையான காங்கிரஸ் தலைவரின் பேச்சு

0
289

நீங்கள் நிர்மலா சீதாராமன் இல்லை நிர்பலா சீதாராமன் என்று காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி  கூறியதையடுத்து மக்களவையில் சர்ச்சையானது.   

மக்களவையில் திங்கள்கிழமை பேசிய காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி, ”நான் நிர்மலா சீதாராமனுக்கு மிகவும் மரியாதை அளிக்கிறேன். அவரை நிர்மலா சீதாராமன் என்று அழைக்கக் கூடாது. ‘நிர்பலா’ (பலவீனமான) சீதாராமன் என்றுதான் அழைக்க வேண்டும். ஏனென்றால், நிதியமைச்சராக இருந்தும் சிறந்த பொருளாதாரக் கொள்கைகளை வகுக்கத் தெரியவில்லை” என்றார். இவரது இந்தப் பேச்சுக்கு அவையில் எதிர்ப்பு எழுந்தது. பாஜகவைச் சேர்ந்த எம்பிக்கள் அதிர் ரஞ்சன் சவுத்ரி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அதிர் ரஞ்சன் சவுத்ரி பேசியதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய  நிதி அமைச்சர் கார்ப்பரேட் வரிகளை குறைத்ததால் சீனாவை விட்டுவிட்டு பல பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் துவங்க முனைகின்றன என்றார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here