நீங்கள் கவிஞரா…? – ரஹ்மான் பாடலுக்கு எழுதுங்கள்

காதலன் படத்தில் இடம்பெற்ற ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈஸி ஊர்வசி பாடலை வைரமுத்து எழுதியிருந்தார். இரண்டு வருடங்களுக்கு முன் எம்டிவி அன்பிளக்டு சீஸன் 6 க்காக ஊர்வசி பாடலின் டியூனுக்கு ஏற்ற புதிய வரிகளை எழுதி அனுப்பும்படி ரசிகர்களை ரஹ்மான் கேட்டிருந்தார். அதில் சிறப்பான வரிகளை தேர்வு செய்து ரஹ்மான் பாடினார். இப்போது மீண்டும் ஊர்வசி பாடலுக்கு புதிய வரிகள் எழுதியனுப்ப கேட்டுள்ளார். அவருக்குப் பிடித்தமான வரிகளை தேர்வு செய்து ஆகஸ்ட் 10 சென்னை ஒய்எம்சிஏ இல் நடிக்கும் கரன்சர்ட்டில் ரஹ்மான் பாட உள்ளார். ஒரேயொரு நிபந்தனை. நோ பாலிடிக்ஸ்.

லட்சுமி எங்கே…?

நாற்பது வருடங்களாக நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகை லட்சுமி. கடைசியாக ஒரு பவர்ஃபுல் வேடத்தில் அவரை தமிழில் பார்த்தது என்றால் கமலின் உன்னைப்போல் ஒருவன். அதன் பிறகு அவரை தமிழ்ப் படங்களில் பார்த்த நினைவில்லை. அதேநேரம் தெலுங்கில் அவருக்கு பல வாய்ப்புகள். இரண்டு வாரங்கள் முன்பு அவர் நடித்த சமந்தாவின் ஓ பேபி வெளியானது. விரைவில் வெளியாகயிருக்கும் நானியின் கேங் லீடர் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். நாகார்ஜுனின் மன்மதடு 2 படத்திலும் லட்சுமி ஒரு முக்கிய வேடம் செய்துள்ளார். திறமையான பழம்பெரும் நடிகை… பயன்படுத்த தமிழ் சினிமா ஏன் தயங்குகிறது?

புதுச்சேரியில் செட்டிலாகும் அமலா பால்

சினிமா, உடனடி புகழ், திடீர் திருமணம், அதைவிட திடீர் விவாகரத்து, பணப்பிரச்சனை, மனநிம்மதிக்காக இமாலய பயணம், புதுக்காதலன், புது உற்சாகம், நிறைய படங்கள் என்று வாழ்க்கையில் இரண்டு சுற்று ஓடிமுடித்துவிட்டார் அமலா பால். கைநிறைய படங்கள், பை நிறைய கரன்சி என்றிருப்பவர் மன அமைதிக்காக தனது வசிப்பிடத்தை புதுச்சேரிக்கு மாற்றிக் கொண்டுள்ளார். அங்குள்ள ஆரோவில்லில் அமலா பால் படப்பிடிப்பு இல்லாத நாள்களில் நேரத்தை செலவிடுவதாக புதுச்சேரியிலிருந்து வரும் தகவல்கள் கூறகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here