டென்மார்க்கில் நாட்டில் இன்ஸ்டாகிராம் மூலம் புகழ் பெற்ற நபர் ஒருவர் தனது தற்கொலைக் கடிதத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்ததை தொடர்ந்து அந்நாட்டுஅரசு இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பிரபலமாக இருப்பவர்களுக்கென சில கொள்கைகளை வகுக்க முடிவு செய்துள்ளது.

இன்ஸ்டாகிராம் பிரபலம் லார்சன். அவரை 3,36,000 பேர் பின்தொடர்கிறார்கள். அவர் தமது தற்கொலை கடிதத்தை தம் இன்ஸ்டா கணக்கில் பகிர்ந்துஇருந்தார். அதற்கு 30 ஆயிரம் பேர் லைக் செய்திருந்தார்கள். 8 ஆயிரம் பேர் மறு பதிவு செய்திருந்தார்கள். இது டென்மார்க்கில் மிகப்பெரிய அளவில் விவாதமானதைத் தொடர்ந்து, இவரைப்போன்ற சமூக வலைத்தளப் பிரபலங்களை கண்காணிக்க அரசு முடிவு செய்துள்ளது.

மேலும் அந்நாட்டு அமைச்சர், ஊடகங்களுக்கு எத்தகைய பொறுப்பு உள்ளதோ,அத்தகைய பொறுப்பு சமூக ஊடகத்தில் பிரபலமாக இருப்பவர்களுக்கும் உள்ளது. எனவே அதனைஉணர்ந்து அவர்கள் கருத்துகளை பகிர வேண்டுமென கூறி உள்ளார். லார்சன் பகிர்ந்த தற்கொலை கடிதத்தை இன்ஸ்டாவிலிருந்து நீக்க இரு தினங்கள் ஆகியுள்ளது. இந்நிலையில் தற்கொலைக்கு முயன்ற நபர் குணமாகி வருவதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here