நீங்கள் இந்தியக் குடியுரிமை பெற்றவர் அல்ல : ஆதார் ஆணைய கடிதத்தால் அதிர்ச்சியில் ஹைதராபாத் மக்கள்

The Unique Identification Authority Of India's (UIDAI) Hyderabad Regional Office has ordered an inquiry against 127 Hyderabad residents based on state police inquiry that the residents are 'illegal immigrants'.

0
484

ஹைதராபாத் நகரைச் சேர்ந்த சட்டர் கான் என்பவருக்கு கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி ஆதார் ஆணையத்தின் வட்டார அலுவலகத்திலிருந்து கடிதம் ஒன்று வந்துள்ளது. அந்தக் கடிதத்தில், சட்டர் கான் இந்தியக் குடியுரிமை பெற்றவர் அல்ல எனப் புகார் வந்துள்ளதாகவும், அதனால், அவர் இந்தியக் குடிமகன் என்பதற்கான ஆவணங்களை கொண்டுவர வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், பிப்ரவரி 20 ஆம் தேதி காலை 11 மணியளவில் (நாளை) அவரை ரங்க ரெட்டி மாவட்டத்தின் பாலபுரில், விசாரணை அதிகாரி முன்பு நேரில் ஆஜராக வேண்டும் என்று அதில் கேட்டுக் கொண்டதாகத் தெரிகிறது. இந்திய குடியுரிமையை அவர் நிரூபிக்கவில்லை என்றால், அவர் சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்தவர் என்பதாக கொள்ளப்படும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது.

ERDh6cw-U0-AAPIuk

இது குறித்து சட்டர் கானின் வழக்கறிஞர் அளித்த பேட்டியில், “40 வயதுடைய சட்டர் கான் தன்னுடைய இளமை காலம் முழுவதும் ஹைதராபாத்தின் இரண்டு பகுதிகளில் வசித்துள்ளார். அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஹைதராபாத்திலே வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு ரேஷன் கார்டுகள் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகள் உள்ளன. அவர்கள் 100 சதவீதம் இந்தியர்கள். அவருடைய தந்தை மாநில அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்றினார். அவரது தாயார் தற்போது பென்ஷன் பெற்று வருகிறார்” என்று விளக்கம் அளித்துள்ளார்.

இது போன்ற கடிதம் பலருக்கும் அனுப்பப்பட்டுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. ஹைதராபாத் நகரைச் சேர்ந்த 127 பேருக்கு பிப்ரவரி 20 ஆம் தேதி (நாளை) நேரில் ஆஜராகுமாறு வட்டார ஆதார் துணை இயக்குநர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக UIDAI எனப்படும் தேசிய தனிநபர் அடையாள ஆணையம் சார்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், “ ஆதார் என்பது குடியுரிமைக்கான ஆவணம் அல்ல. ஆதார் சட்டப்படி, ஆதார் அடையாள அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் ஒருவர் அதற்கு முன்பு 182 நாட்கள் இந்தியாவில் வசித்துள்ளார் என்பதை உறுதி செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தவறான தகவல்களின் அடிப்படையில் 127 பேர் ஆதார் அடையாள அட்டை பெற்றுள்ளதாக போலீசார் தரப்பில், ஹைதராபாத் வட்டார அலுவலகத்தில் அறிக்கை அளித்து இருக்கலாம்.

முதல்கட்ட விசாரணையில் தகுதியில்லாத சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் ஆதார் எண்ணைப் பெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற ஆதார் எண்கள் ரத்து செய்யப்படும். வட்டார ஹைதராபாத் அலுவலகம் அந்த நபர்களுக்கு நேரில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. எப்படி ஆதார் பெற்றார்கள் என்பதை உறுதி செய்யுமாறு அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் எண்ணை ரத்து செய்வது என்பது ஒரு குடிமகனின் தேசியத்தை ரத்து செய்வதுடன் தொடர்புடையது ஆகாது. ” எனக் கூறப்பட்டுள்ளது.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here