நீங்களும் சுத்தமான தேங்காய் எண்ணெய் தயாரிக்கலாம் : எப்படி?

0
324

தேவையான பொருட்கள் : 

  • வீட்டுத் தோட்டத்தில் விளைந்த நன்கு முற்றிய தேங்காய்: 3
  • அகலமான பாத்திரம் – ஒன்று
  • தேங்காய் உடைத்து சில்லுகள் எடுக்க கத்தி: 1
  • வடிகட்ட வெள்ளைக் கதர்த்துணி- அரை மீட்டர்

செய்முறை :

நன்கு முற்றிய தேங்காய்களை நார் உறித்து எடுத்துக் கொண்டு. தேங்காயின் கண் உள்ள இடத்தில் கத்தியால் பதமாகக் கீறி அதன் வழியே தேங்காயில் இருக்கும் அமிர்தம் போன்ற நீரை வடிகட்டில் ஒரு பாத்திரத்தில் அருந்துவதற்காக எடுத்து வைத்துக் கொள்ளவும். இப்போது சுத்தமான தேங்காய் எண்ணெய் தயாரிக்க வேண்டுமில்லையா?

தேங்காயில் உள்ள நீரைவடிகட்டிய பின் அதை உடைத்து சில்லுகளாக எடுத்து வைத்துக் கொண்டு சிறு துண்டுகளாகநறுக்கிக் கொள்ளவும். நறுக்கிய துண்டுகளில் சிறிது, சிறிதாக நீர் விட்டுநன்கு நைஸாக அரைத்து தேங்காய்ப் பாலை ஒரு வெள்ளைத்துணியால் வடிகட்டி எடுக்கவேண்டும். வெள்ளைத்துணியால் நன்கு அழுத்திப் பிழிந்தெடுத்த பின் ஓரிரவு முழுதும்அதை அப்படியே ஒரு பாத்திரத்தில் மூடி வைக்கவும். மறுநாள் காலையில் எழுந்துபார்த்தால் பாத்திரத்தின் மேற்புறத்தில் நமக்கு எண்ணெய் காய்ச்சத் தேவையான தெளிவு படிந்திருக்கும்.

அதை ஒரு கரண்டியின் உதவியால் மெதுவாக வழித்து வேறொரு ஜாடியில் சேகரிக்க வேண்டும். இந்த ஜாடியை மைக்ரோ வேவ் ஓவனிலோ அல்லது கேஸ் அடுப்பிலோ வைத்துக் காய்ச்சினால் நமக்குத் தேவையான சுத்தமான சுகாதார முறையில் தயாரிக்கப் பட்ட தேங்காய் எண்ணெய் கிடைத்து விடும்.

வீட்டில் தயாரிக்கும்  தேங்காய் எண்ணெயின் அளவு குறைவாகத்தான் இருக்கும். இந்த எண்ணெயையும் நாம் சமையலுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here