நிவர் புயல்  (நவ-25 )நாளை மறுநாள் கரையை கடக்க உள்ள நிலையில், சென்னையில் இருந்து செல்லும் 6 விரைவு ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது சென்னையில் இருந்து 630 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்தப் புயல் தீவிர புயலாக வலுப்பெற்று, 25ம் தேதி காரைக்கால் – மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கக் கூடும்.

இதனால், உருவாகும் நிவர் புயல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த புயலால் பாதிப்புகள் ஏற்படக் கூடிய மாவட்டங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நிவர் புயல் எச்சரிக்கையினால் சென்னையில் இருந்து செல்லும் 6 விரைவு ரயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

  • முன்னெச்சரிக்கை காரணமாக 9 விரைவு ரயில்கள் பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
  • திருச்சி-சென்னை இடையிலான ரயில்களும் முழுமதுவமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
  • தஞ்சை-சென்னை, சென்னை-தஞ்சை ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
  • மைசூரு-மயிலாடுதுறை ரயில் சேவை நவ.24-ம் தேதி திருச்சியுடன் நிறுத்தப்படுகிறது.
  • மயிலாடுதுறை-மைசூரு ரயில் சேவை நவ.25-ம் தேதி திருச்சியில் நிறுத்தப்படுகிறது.
  • எர்ணாகுளம்-காரைக்கால் விரைவு ரயில் சேவை நவ.24-ம் தேதி திருச்சியுடன் நிறுத்தப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here