நில மோசடி விவகாரம்: நடிகர் சூரியிடம் விசாரணை

0
137

நிலம் வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக அளித்திருந்த புகாரின் அடிப்படையில் வியாழக்கிழமை ஆஜரான நடிகர் சூரியிடம் அடையார் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

நிலம் வாங்கித் தருவதாக 2 கோடியே 70 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக வீர தீர சூரன் படத் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன், ரமேஷ் ஆகியோர் மீது நடிகர் சூரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். வீர தீர சூரன் படத்தில் நடித்ததற்காகத் தனக்கு ரூ. 40 லட்சம் சம்பள பாக்கி வைத்துள்ள தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன், நிலம் வாங்கித் தருவதாகப் பணம் பெற்று மோசடி செய்ததாக தனது புகார் மனுவில் தெரிவித்திருந்தார் சூரி.

அதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் உள்ளிட்ட இருவர் மீது கடந்த அக்டோபர் 9ஆம் தேதி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் தனது புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சூரி வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து நில மோசடி தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கில் தன் மீதும் தன் தந்தை (ரமேஷ்) மீதும் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு நடிகர் விஷ்ணு விஷால் மறுப்பு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நில மோசடி புகார் தொடர்பாக ஆஜரான நடிகர் சூரியிடம் அடையாறு காவல்துறையினர் வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவர் சமர்பித்த நில மோசடி தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்த காவல்துறையினர் அவரின் வாக்குமூலத்தை எழுத்துப்பூர்வமாக பதிவு செய்தனர். 

அதனைத் தொடர்ந்துதயாரிப்பாளர் அன்புவேல் ராஜன், ரமேஷ் குடவாலா ஆகியோருக்கு காவல்துறையினர்சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நன்றி : தினமணி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here