’நிலவேம்பு கஷாயம் இப்போதைக்கு வேண்டாம்’: கமலின் அட்வைஸ் இது

0
455

நிலவேம்பு கஷாயம் இப்போதைக்கு விநியோகிக்க வேண்டாம் என நடிகர் கமலஹாசன் தனது ரசிகர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் தீவிரமடைந்து வருகின்றன. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில், தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சிகள் உள்ளிட்ட அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிலவேம்பு குடிநீர் கஷாயம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கிடையில் நிலவேம்புக் குடிநீரால் மலட்டுத் தன்மை ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக ஒரு தகவல் பரவியது. இதனால் பொதுமக்களிடையே குழப்பமும், அச்சமும் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நிலவேம்பு குறித்து தவறான தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் வியஜபாஸ்கர் எச்சரித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் கமலஹாசன், நிலவேம்பு கஷாயம் இப்போதைக்கு விநியோகிக்க வேண்டாம் என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர், ”சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும்வரை நம் இயக்கத்தார் நிலவேம்பு விநியோகத்தில் ஈடுபடாதிருக்க கேட்டுக்கொள்கிறேன். மற்ற பணிகள் தொடரட்டும்” என பதிவிட்டுள்ளார்.

kamal

இதையும் படியுங்கள்: துல்லியம், நியாயம், ஆதாரம்: ஊடகவியலின் அடிப்படைகள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்