நிறம் குறித்து விமர்சித்தவர்களுக்கு அட்டகாசமான பதில் கொடுத்த அட்லி

0
242

விஜய்-அட்லி 3-வது முறையாக இணைந்துள்ள படம் பிகில். இப்படம் தீபாவளியன்று திரைக்கு வருகிறது. இப்படத்தில் விஜய், நயன்தாரா, விவேக், இந்துஜா, கதிர், ஆனந்த்ராஜ் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். 

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா தாம்பரத்தில் உள்ள சாய்ராம் கல்லூரியில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர் அட்லி  பேசியதாவது:

மெர்சல் படத்திற்கு பிறகு பிகில் பண்றதுக்கு முழு காரணம் என்னோட அண்ணன் தான். எல்லோருக்கும் ஃபேவரைட் ஹீரோ இருப்பாங்க, எனக்கு எப்பவுமே விஜய் தான்.  ஒரு பயங்கரமான லைன் மாட்டியிருக்குனு விஜய் அண்ணா கிட்ட சொன்னேன். கதை கேட்டுட்டு, ஏஜிஎஸ் கூட பண்ணலாம்னு நம்பர் கொடுத்தார்.

அப்போது அவர் ஷாருக்கானுடன் இருக்கும் மீம் போட்டுகாட்டப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ஆங்கிலம் தமிழ் எல்லாம் அறிவு கிடையாது, மொழிதான். அதே மாதிரி கருப்பு, வெள்ளை கலர் தான்  அழகு இல்லை என்றார்.

அட்லி பற்றி நடிகர் விவேக் பேசுகையில் எனக்கு அட்லியின் உழைப்பு பிடிக்கும். சூரியனை மாதிரி பிரகாசமா சுடர்விட்டு இருக்கணும்னா, சூரியனை மாதிரி இடைவிடாம எரியணும் (உழைக்கணும்). அந்த காரணத்தால் தான் அட்லி கருப்பாக இருக்கிறார் போன்று என்றார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here