ஹாலிவுட் நடிகை பெல்லா த்ரோனின், டிவிட்டர் கணக்கு சில நாட்களுக்கு முன்னர் ஹேக் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், த்ரோன் தனது நிர்வாணப் படங்களை தானே வெளியிட்டுள்ளார். 

இது குறித்து விளக்கம் அளித்துள்ள த்ரோன், “எனது டிவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிட்டது என்பதை அறிவீர்கள். ஹேக்கர், எனது நிர்வாணப் படங்களை வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டி வந்தார். நான் எடுத்த அந்த நிர்வாணப் படங்கள், ஒரு முக்கியமான நபருக்கானது.

என்னை ஹேக்கர் வெகு நேரமாக கட்டுப்படுத்தி வந்தான். இனி அவனால் அதைச் செய்ய முடியாது. நானே எனது படங்களை வெளியிடுகிறேன்.

என்னை இனி அந்த ஹேக்கர் கட்டுப்படுத்த முடியாது. நான்தான் எனது வாழ்க்கையை கட்டுப்படுத்தும் ஒரே நபர். உனக்கு ஒரு எச்சரிக்கை, எப்.பி.ஐ உன்னைத் தேடி சீக்கிரமே வரும். எச்சரிக்கையாக இரு” என்று கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல், த்ரோன் தன் படங்களுடன் கூடவே ஹேக்கருடன் தான் பேசிய பதிவுகளையும் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து பதிவிட்டுள்ளார்.

த்ரோனின் வெளியிட்ட இந்த டிவீட் மற்றும் நிர்வாணப் படங்களுக்கு தொடர்ந்து ஆதரவு குவிந்த வண்ணம் இருக்கின்றது.

 (இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here