நிர்மலா சீதாராமன் வெங்காயம் சாப்பிடுவதில்லை என்றால் அவகேடோ (வெண்ணெய் பழம்) சாப்பிடுவாரா? – ப சிதம்பரத்தின் பஞ்ச்

0
695

நிர்மலா சீதாராமன்  வெங்காயம்  சாப்பிடுவதில்லை என்றால் அவகேடோ (வெண்ணெய் பழம்) சாப்பிடுவாரா என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப சிதம்பரம்  கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்களவையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி. சுப்ரியா சூலே, ”அரசி, பால் உள்ளிட்ட பல பொருட்களை நாம் ஏற்றுமதி செய்கிறோம். வெங்காய உற்பத்தி செய்யும் விவசாயிகள் பாதுகாக்கப்பட வேண்டும். வெங்காய உற்பத்தி குறைவதற்கான காரணம் என்ன” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு மத்திய நிதியமைச்சர் பதிலளித்து பேசிக் கொண்டிருக்கும் போது குறுக்கிட்ட மற்றொரு எம்.பி.,”நீங்களும் வெங்காயம் சாப்பிடுவீர்கள் தானே. உங்களுக்கு அதன் பாதிப்பு தெரியும் தானே” என்றார். அதற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், ”நான் வெங்காயமும் பூண்டும் அதிகமாக சாப்பிடுவதில்லை. வெங்காயம் மற்றும் பூண்டு அதிகம் சாப்பிடாத குடும்பத்தில் இருந்து வந்தவள் நான்” என்றார்.

மத்திய அமைச்சரின் இந்த பேச்சு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் நிதியமைச்சராக இருக்கும் ஒருவர், சாமானிய மக்களின் நிலையை புரிந்து கொண்டு அதற்கு பதிலளித்திருக்க வேண்டும். ஆனால், நிர்மலா சீதாராமனோ அதிமேதாவித்தனமாக செயல்படுவதாக காட்டிக் கொண்டு, தனது சாதியத்தை நாடாளுமன்றத்தில் எதிரொலித்துள்ளார் என்ற சர்ச்சை உருவாகியுள்ளது. 

மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ப.சிதம்பரம் இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்துக்கு வருகை தந்துள்ளார்.

செய்தியாளர்களிடம் ப சிதம்பரம் பேசுகையில் நிர்மலா சீதாராமன் பேசியது குறித்து கேட்டபோது    வெங்காயம் சாப்பிட மாட்டேன் என நிதியமைச்சர் கூறியிருக்கிறார். அப்படியானால் அவர் என்ன சாப்பிடுவார்? அவகேடோ (வெண்ணெய் பழம்) சாப்பிடுவாரா என கேள்வி எழுப்பியுள்ளார் ப.சிதம்பரம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here