ரஃபேல் ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகத்திடம் கலந்து ஆலோசிக்காமல் பிரதமர் மோடி தன்னிச்சையான முடிவை எடுத்துள்ளார் . இந்த முடிவுக்கு பாதுகாப்பு அமைச்சகம் மோடிக்கு கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்துள்ளது என்று என்.ராம் தி ஹிந்து (ஆங்கிலம் ) நாளிதழில் ஒரு புலனாய்வு செய்தி வெளியிட்டுள்ளார்.

பாஜக கூட்டணி அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு, பிரான்ஸுக்கு 2015, ஏப்ரல் 15- இல் மோடி சென்றார். அந்நாட்டு அரசிடம் இருந்து, ஆயுதங்கள் பொருத்தப்பட்டு பறப்பதற்கு தயார் நிலையில் 36 ரஃபேல் போர் விமானங்களை இந்தியா வாங்கவுள்ளதாக அறிவித்தார். 
இதையடுத்து, பிரான்ஸிடமிருந்து சுமார் ரூ.60,000 கோடியில் 36 ரஃபேல் போர் விமானங்களைக் கொள்முதல் செய்யும் ஒப்பந்தம் 2016, செப்டம்பர் 23-இல் கையெழுத்தானது. இதில், விமானங்களை நீண்ட காலத்துக்கு பராமரிக்கும் பொறுப்பையும் பிரான்ஸ் அரசு ஏற்றுக் கொண்டது.

என்.ராம் வெளியிட்டுள்ள புலனாய்வு செய்தியில் மோடி தன்னிச்சையாக செயல்பட்டது பாதுகாப்பு அமைச்சகத்தின் மற்றும் இந்திய பேச்சுவார்த்தை குழுவின் பேச்சுவார்த்தை திறமையை குறைத்து மதிப்பிடுவதாக அமைந்துவிடும் என்று நவம்பர் 24, 2015 அன்று வெளியான பாதுகாப்பு அமைச்சகத்தின் குறிப்பு தெரிவிக்கிறது. இந்த குறிப்பு அப்போது பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கரின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது.

அந்த குறிப்பில் பிரதமர் அலுவலகத்தில் இருக்கும் இந்திய பேச்சுவார்த்தை குழுவில் இடம்பெறாத அதிகாரிகள் பிரான்ஸ் அதிகாரிகளுடன் தன்னிச்சையாக முடிவெடுத்து பேச்சுவார்த்தை நடத்தாமல் விலகி இருக்க வேண்டும் என்று நாங்கள் அறிவுரை வழங்கலாம் . பாதுகாப்பு அமைச்சகம் நடத்தும் பேச்சுவார்த்தையில் பிரதமர் அலுவலகத்துக்கு நம்பிக்கை ஏற்படாவிட்டால் பிரதமர் அலுவலகம், திருத்தப்பட்ட நடைமுறையில் தன்னிச்சையாக முடிவெடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கில் மத்திய அரசு ரஃபேல் விமானங்களின் விவரங்களை மூடிய உறையில் வைத்து சீலிட்டு உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. இவ்வாறு சமர்பித்த போது பிரதமர் அலுவலகத்தின் தலையீடு பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

தி ஹிந்து (ஆங்கிலம்) நாளிதழிடம் இருக்கும் அதிகாரபூர்வ ஆவணங்களின்படி – பிரதமர் எடுத்த இந்த முடிவுக்கு பாதுகாப்பு அமைச்சகம் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்திருக்கிறது. இந்த ஒப்பந்தத்தில் பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் இந்திய பேச்சுவார்த்தைக் குழுவினருக்கு எதிராக செய்லபட்டுள்ளார். அப்போதைய பாதுகாப்பு செயலாளர் ஜி மோகன் குமார் இந்த அதிகாரபூர்வ குறிப்பை தனது கைப்பட எழுதியுள்ளார். இதுபோன்று பிரதமர் அலுவலகம் நடத்தும் பேச்சுவார்த்தைகள் தவிர்க்கப்பட வேண்டியது ஏனெனில் அது எங்கள் பேச்சுவார்த்தை நிலைப்பாடுகளை வலிவற்றதாக்குகிறது என்று குறிப்பிட்டுள்ளார்

3

நவம்பர் 24, 2015 அன்று பாதுகாப்பு செயலாளரின் எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த எதிர்ப்பு எஸ் கே ஷர்மா (துணை செயலாளர்- Air-II), இணை செயலாளர் , கொள்முதல் மேலாளர், பொது இயக்குனர் ஆகியோரின் ஒப்புதலின்படி பதிவு செய்யப்பட்டது.

பாஜக கூட்டணி அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்து, 2015, ஏப்ரல் 15- இல் பிரான்ஸுக்கு சென்ற மோடி அந்நாட்டுஅரசிடம் இருந்து, ஆயுதங்கள் பொருத்தப்பட்டு பறப்பதற்கு தயார் நிலையில் 36 ரஃபேல் போர் விமானங்களை இந்தியா வாங்கவுள்ளதாக அறிவித்தார். இந்த 36 ரஃபேல் விமானங்களுக்கான ஒப்பந்தம் செப்டம்பர்23, 2016 அன்று கையெழுத்தானது.

பாதுகாப்பு அமைச்சகத்தின் குறிப்பு சொல்வது என்னவென்றால் , மோடியின் தன்னிச்சையான பேச்சுவார்த்தை பற்றி பிரான்ஸ் பேச்சுவார்த்தை குழு தலைவர் ஜெனரல் ஸ்டீபன் ரெப் , அக்டோபர் 23, 2015 அன்று இந்திய பாதுகாப்பு அமைச்சகத்துக்கு கடிதத்தின் வாயிலாக தெரியபடுத்தினார். பிரதமர் அலுவலகத்தின் இணை செயலாளர் ஜாவேத் அஸ்ரஃப் மற்றும் பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆலோசகர் லூயிஸ் வேஸ்ஸிக்கும் இடையே நடந்த தொலைப்பேசி உரையாடல் பற்றி இந்தக் கடிதம் குறிப்பிட்டுள்ளது . இந்த தொலைப்பேசி உரையாடல் அக்டோபர் 20, 2015 அன்று நடந்தது.

ஜெனரல் ஸ்டீபன் ரெப்பின் கடிதத்தை பிரதமர் அலுவலகத்தின் கவனத்துக்கு பாதுக்காப்பு அமைச்சகம் கொண்டுவந்தது. இது குறித்து இந்திய பேச்சுவார்த்தை குழுவில் இருந்த மார்ஷல் எஸ் பி பி சின்ஹா, விமான பணியாளர்களின் துணைத் தலைவர் பிரதமரின் இணைச் செயலாளர் அஷ்ரஃப் க்கு எழுத்து மூலம் தெரியப்படுத்தினர் .

இதற்கு நவம்பர் 11, 2015-ல் பதிலளித்த பிரதமரின் இணைச் செயலாளர் அஷ்ரஃப் பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆலோசகர் லூயிஸ் வெஸ்ஸியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை ஒப்புக்கொண்டார். பிரான்ஸ் அதிபர் அலுவலத்தின் ஆலோசனைபடியே இப்பேச்சுவார்த்தை நடந்ததாகவும் கூறியுள்ளார்.ஜெனரல் ரெப் கடிதத்தில் உள்ள விஷயங்கள் தொடர்பாக பேசியதாகவும் ஒப்புக் கொண்டுள்ளார்.

பிரான்ஸ் அதிபர் ஃபிரான்கோய்ஸ் ஹோலன்ட் AFP க்கு கொடுத்த பேட்டியில் பாஜக ஆட்சியில் செய்யப்பட்ட ரஃபேல் ஒப்பந்த்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது என்று கூறியுள்ளார். இந்த ரிலையன்ஸ் நிறுவனம் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனம் .

2

இதனையடுத்தே பிரதமர் அலுவலக இணைச்செயலருக்கும் பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் ஆலோசகருக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தைகள் இந்திய பேச்சுவார்த்தைக் குழுவின் பேச்சுவார்த்தைகளின் ஊடே தன்னிச்சையாக நிகழ்ந்ததாகக் கருதப்படுதற்கு இடமுண்டு என்பதை பாதுகாப்பு அமைச்சக குறிப்பும் குறிப்ப்பிட்டுள்ளது.

அந்தக் குறிப்பில், “இப்படிப்பட்ட தன்னிச்சையான பேச்சுவார்த்தைகளை பிரான்ஸ் தங்கள் பக்கம் சாதகமாக விளக்கம் அளித்துக் கொள்ள வழிவகை செய்யும் அதனால் அது நம் நலன்களுக்குக் கேடு விளைவிக்கும், இந்திய பேச்சுவார்த்தைக் குழு எடுத்த நிலைப்பாடு பலவீனமடையும். அதுதான் இந்தச் சந்தர்ப்பத்தில் நடந்துள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

பிரான்ஸ் அரசு பிரதமர் அலுவலக இணைப் பேச்சுவார்த்தைகளை தங்கள் பக்கம் சாதகமாக மாற்றியதற்கு ஓரு “பிரகாசமான உதாரணம்” என்னவெனில் ஜெனரல் ரெப் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்ட விஷயமே. அது என்னவெனில், “பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் ஆலோசகருக்கும் இந்தியப் பிரதமர் அலுவலக இணைச் செயலருக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் விளைவை கருத்தில் எடுத்துக் கொண்டு விநியோக நடைமுறைகளில் வங்கி உத்தரவாதம் எதுவும் தேவையில்லை, மேலும் அந்த அனுகூலக் கடிதம் தொழிற்துறை சப்ளையர்களின் சப்ளை நடைமுறைகளை முறையாக அமல்படுத்துவதற்கான போதுமான உத்தரவாதங்களை வழங்குகிறது”

இதுதான், இந்த விஷயம்தான்… ரஃபேல் ஒப்பந்தத்தில் இந்திய பேச்சுவார்த்தைக் குழு எடுத்த நிலைப்பாட்டிற்கும் பிரதமர் அலுவலக பேச்சுவார்த்தைக்கும் இடையேயான முரண்பாடு விவகாரம் எழுந்ததாக பாதுகாப்பு அமைச்சக குறிப்பறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. அதாவது வர்த்தக ரீதியான வழங்கல்கள் அரசு உத்தரவாதம் என்ற ஆதரவுடன் மேற்கொள்ளப்பட வேண்டும், அல்லது வங்கி உத்தரவாதம் இருக்க வேண்டும். ஆனால் இங்கு வங்கி உத்தரவாதம் பற்றிய பேச்சே இல்லை என்று பாதுகாப்பு அமைச்சக குறிப்பு தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.

மோடியின் தன்னிச்சையான முடிவால்தான் ரஃபேல் ஒப்பந்தத்துக்கு ‘சோவ்ரெய்ன் கேரன்டி’ என்று சொல்லப்படும் ‘இறையாண்மை ஒப்பந்தம்’ கிடைக்கவில்லை என்றும் அந்த குறிப்பில் கூறப்பட்டுள்ளது. தன்னிச்சையான பேச்சுவார்த்தைகளில் முரண்பாடான இருவேறு நிலைப்பாடுகளை இந்தியத் தரப்பு எடுப்பதில் இந்த ஒரு தருணம் மட்டுமல்ல. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலும் ஜனவ்ரி, 2016 இல் பிரான்ஸ் நாட்டுடன் ஒப்பந்தத்துக்காக பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறித்த ஆவணங்கள் தி ஹிந்து ஆங்கிலத்திடம் இருக்கிறது . அரசு உத்தரவாதம் அல்லது வங்கி உத்தரவாதம் என்பது தேவையில்லை எனறு அஜித் டோவல், மனோகர் பாரிக்கருக்கு அனுப்பிய முன்மொழிவையும் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் தன் கோப்புக் குறிப்பில் பதிவு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Courtesy : The Hindu