நிர்மலா சீதாராமனின் கருத்துக்கு எதிரொலி ; ‘நாடுதான் முக்கியம்’ உபர் ஆப்பை டெலீட் செய்து விட்டேன் – பிரபல இயக்குனர் டிவீட்

0
424

 எனக்கு நாடுதான் முக்கியம்; எனவே அந்த ஆப்-ஐ டெலீட் செய்து விட்டேன் என்று பிரபல பாலிவுட் இயக்குனர் அனுபவ் சின்ஹா டிவீட் செய்துள்ளார். இவர் சமீபத்தில் article 15  என்ற பிரபலமான படத்தை இயக்கியவர். இந்தப் படம் ஜாதி வெறி குறித்த பிரச்சனைகளை பேசியது . இதற்கு முன்னதாக ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘ரா ஒன்’ படத்தையும், முல்க் என்ற பிரபலமான படங்களையும் இயக்கியவர். 

 பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் 100 நாள்கள் சாதனைகள் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில்  செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்றது.

அதில் பங்கேற்ற அமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த மூன்று மாதங்களில் மத்திய அரசு மேற்கொண்ட சிறப்புத் திட்டங்கள், சீர்திருத்த நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றைப் பட்டியலிட்டார். 

அப்போது அவர் வாகன விற்பனை சரிவு குறித்து பேசுகையில், வாகன விற்பனை சரிவுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. ஒருவர் சொந்தமாக கார் வாங்கி அதற்கு மாதந்தோறும் மாதத் தவணைக் கட்டுவதற்கு பதிலாக, தேவைப்படும் போது ஓலா அல்லது உபர் கால் டாக்ஸியைப் பயன்படுத்திக் கொள்வதே எளிது என்று நினைக்கலாம். இதுபோல லட்சக்கணக்கானோர் நினைப்பதால் வாகன விற்பனை சரிவடையலாம். இதுபோல பல காரணங்கள் வாகன விற்பனை சரிவுக்குக் காரணங்களாக அமைந்துள்ளன என்றும் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். அவரது இந்த கருத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வந்தன.  

இந்நிலையில் எனக்கு நாடுதான் முக்கியம்; எனவே அந்த ‘ஆப்’-ஐ டெலீட் செய்து விட்டேன் என்று இயக்குனர் அனுபவ் சின்ஹா பதிவிட்டிருந்தார் 

அதற்காக அவரைப் பாராட்டியும் விமர்சித்தும் வருகின்றனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here