பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் ஆளுநர் மாளிகைக்கு எந்த தொடர்பும் இல்லைபேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் ஆளுநர் மாளிகைக்கு தொடர்பு இல்லை என்றும் விமர்சனங்களுக்கும் ஒரு எல்லை உண்டு என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் நக்கீரன் இதழில் வெளியான செய்திக்கு ஆளுநர் மாளிகை மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆளுநர் மாளிகை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநருக்கும், ஆளுநர் மாளிகைக்கும் எந்த வித தொடர்பும் இல்லை. முழுமக்க முழுக்க பொய்யான தகவல், ஒரு சதவீதம் கூட உண்மையில்லை என தெரிவித்துள்ளது.

ஆளுநர் மாளிகைக்கு நிர்மலா தேவி வந்ததில்லை என விளக்கம் அளித்துள்ளது. மதுரை பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் ஆளுநர் தங்கியது கிடையாது.

நக்கீரன் இதழ் கட்டுரை விவகாரத்தில், மாநிலத்தின் முதல் குடிமகனை தரம் தாழ்ந்து விமர்சித்தால் நக்கீரன் கோபால் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், ஆளுநர் மாளிகையின் மாண்பைக் குறைக்கும் எந்த நடவடிக்கையையும் அனுமதிக்க முடியாது. பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் ஆளுநரை இணைத்து பேசுவதற்கு ஆளுநர் மாளிகை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும், உண்மை என்னவென்று விசாரிக்காமல் நக்கீரன் இதழ் ஆளுநர் குறித்து அவதூறு செய்திகளை வெளியிட்டு வருகிறது. காவல்துறை விசாரணை மூலம் உண்மை வெளிவரும் என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது

கடந்த 6 மாதங்களுக்கு மேலாக ஆளுநர் மாளிகை பொறுமை காத்து வந்தது. நக்கீரன் விவகாரத்தில் பத்திரிகை விதிகள் மீறப்பட்டுள்ளன. விமர்சனங்களுக்கும் ஒரு எல்லை உண்டு என ஆளுநர் மாளிகை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Courtesy : Dinamani

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here