மாணவிகளுக்கு பேராசிரியை நிர்மலா தேவி பாலியல் வலைவிரித்தது தொடர்பான வழக்கை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என சி.பி.சி.ஐ.டி.க்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வந்தவர் நிர்மலா தேவி. இவர் அதே கல்லூரியில் படித்த 4 மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டார். இவர் கொடுத்த தகவலின் பேரில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். 3 பேரும் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரித்து வருகிறது.
கைது செய்யப்பட்டவர்களில் கருப்பசாமி தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவரது மனு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த ஐகோர்ட், நிர்மலா தேவி விவகாரத்தில் மாணவிகள் சம்பந்தப்பட்டிருப்பதால் யாருக்கும் ஜாமீன் வழங்க முடியாது என திட்டவட்டமாக கூறிவிட்டது.
மேலும், ‘இவ்வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி., செப்டம்பர் 10-ம் தேதிக்குள் இறுதியான குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும். செப்டம்டபர் 9-ம் தேதியில் இருந்து 6 மாத காலத்திற்குள் மாவட்ட நீதிமன்றம் வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும்.  அதுவரை யாருக்கும் ஜாமீன் வழங்கக்கூடாது’ என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

courtesy: maalaimalar

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here